முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

17 வீரர்களுக்கு அர்ஜூனா விருது: மத்திய அரசு அறிவிப்பு

சனிக்கிழமை, 15 ஆகஸ்ட் 2015      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி - விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருது பெறுவோரின் பட்டியலை மத்திய விளையாட்டு அமைச்சகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அண்மையில் வெளியான விருது பட்டியலில் இருந்து எந்த மாற்றமும் இன்றி அதே பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கேல் ரத்னா விருதை டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பெறுகிறார்.

சமீபத்தில் நடைப்பெற்ற விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டியில், பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்து வீராங்கனையான மார்டினா ஹி்ங்கிசுடன் ஜோடி சேர்ந்து சாம்பியன் பட்டம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.  இதை பாராட்டும் விதத்தில் அவரது பெயர் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் கேல் ரத்னா விருது வழங்கப்படவுள்ளது.

அர்ஜூனா விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த பளுதூக்குதல் வீரர் சதீஷ் சிவலிங்கம், இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா,ஹாக்கி கோல் கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ், பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த், துப்பாக்கி சுடுதல் வீரர் ஜிது ராய் உள்பட 17 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து பேசிய சானியா மிர்சா கேல் ரத்னா விருதுக்கு தேர்வாகி இருப்பது தனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்றும், நாட்டு மக்கள் என் மீது வைத்துள்ள அன்பையும், மரியாதையையும் உணர்ந்து கொள்ள முடிவதாகவும் தெரிவித்தார். இந்த விருது தான் மேலும் வெற்றிகளை குவிக்க உந்துசக்தியாக இருக்கும் என்றும் சானியா கூறினார்.தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருதுகளை வருகிற 29-ந்தேதி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்குகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்