முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக பாட்மிண்டன் இறுதிச் சுற்றில் போராடி தோல்வி: சாய்னா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 16 ஆகஸ்ட் 2015      விளையாட்டு
Image Unavailable

ஜகார்தா(இந்தோனேசியா): உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் இறுதிச் சுற்றில் தோல்வி அடைந்தார். இதனால், வெள்ளிப் பதக்கத்துடன் புதிய சரித்திரம் படைத்தார்.  இந்த வெற்றி மூலம்அவர் , உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறைப் படைத்துள்ளார் ..

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வந்த இந்தப் போட்டியில், நேற்று நடைபெற்ற இறுதிச் சுற்றில், உலகின் 2-ம் நிலை வீராங்கனையான சாய்னா, உலகின் முதல் நிலை வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான ஸ்பெயினின் கரோலினா மரினை சந்தித்தார்.  இறுதிச் சுற்றில், சாய்னா நேவால் 16-21, 19-21 என்ற நேர் செட்களில் கரோலினாவிடம் தோல்வி கண்டார். வெற்றி பெற்ற கரோலினா தனது உலக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தார்.

எனினும், இப்போட்டி முழுவதுமே தன் அற்புதமான ஆட்டத் திறனாலும், அசாத்திய போராட்ட அணுகுமுறையாலும் இந்திய ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார் சாய்னா.  உலக பாட்மிண்டன் போட்டியில் சாய்னாவின் மூலம் இந்தியாவுக்கு 5-வது பதக்கம் கிடைத்துள்ளது. உலக பாட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் பிரகாஷ் படுகோன் ஆவார். அவர் 1983-ல் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago