முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் 1லட்சம் கோடி டாலர் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் அரபு எமிரேட்டில் முதலீட்டாளர்களிடம் பிரதமர் மோடி உறுதி

திங்கட்கிழமை, 17 ஆகஸ்ட் 2015      உலகம்
Image Unavailable

மஸ்தார் சிட்டி(யு.ஏ.இ): பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு எமிரேட்டில் தனது 2நாள் பயணத்தை மஸ்தார் சிட்டியில்துவக்கினார்.இந்த நகரம் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு பிரபலமான இடமாகும். இந்த பயணத்தில் அவர் முதலீட்டாளர்களையும் சந்தித்தார்.

நேற்று மாலை துபாயில் உள்ள சர்வதேச கிரிக் கெட் ஸ்டேடியத்தில் பிரதமர் மோடிக்கு துபாயில் வாழும் 50ஆயிரம் இந்தியர்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர்.இந்த வரவேற்பு நிகழ்ச்சியின்போது35சர்வதேச கலைஞர்கள் தங்களது கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமையன்று பிரதமர் மோடி அபுதாபியில் உள்ள ஷேக் சையத் கிராண்ட் மசூதிக்கு சென்றார். இந்த மசூதி ஐக்கிய அரபு எமிரேட்டின் ஜனாதிபதி ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நகயானின் தலைமைத்துவத்தையும் பரந்த பார்வைவையை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது என பார்வையாளர்கள் புத்தகத்தில்பிரதமர் மோடி எழுதினார். பின்னர் இந்தியாவில் இடம் பெயர்ந்த தொழிலாளர்களையும் பிரதமர் மோடி சந்தித்தார்.

பிரதமர் மோடியின் இந்த பயணத்தின் போது இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்டும் வளை குடா பகுதியிலும் இந்திய கடல் பிராந்தியத்திலும் கடல் சார் பாதுகாப்பை வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டது. மனித நேய உதவி மற்றும் இயற்கைப்பேரிடர் மற்றும் மோதல் சூழல்களில் இருநாடுகளும் கூட்டாகசெயல்படுவது குறித்தும் முடிவு செய்யப்பட்டது.இரு நாடுகள் இடையே தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் அளவில் பேச்சு வார்த்தை நடத்துவது என்றும் இந்த பேச்சு வார்த்தை 6மாதத்திற்கு ஒரு முறை நடத்துவது என்றும் தெரிவிக்கப்பட்டது.

சைபர் பாதுகாப்பு ,தீவிரவாதத்திற்கு உதவும் சைபர் தொழில் நுட்பத்தை தடைசெய்வது குறித்தும் சமூக ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் நிகழ்வுகளை தடை விதிப்பது குறித்தும் இந்தியா-ஐக் கிய அரபு எமிரேட் இடையே ஒத்துழைப்பு மேற்கொள்ளப்படும் என்றும்தெரிவிக்கப்பட்டது. கறுப்பு பணம், போதை மருந்து கடத்தல் தடுப்பது,குற்றவாளிகளை அவர் சார்ந்த நாட்டிற்கு அனுப்புவது குறித்தும் இரு நாடுகள் இடையே உறவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தீவிரவாதத்தை தடுப்பதற்கு இரு நாடுகள் இடையே மேற்கொள்ளும் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் புலனாய்வு தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் முடிவு செய்யப்பட்டன. இந்த பயணத்தின் போது இந்தியாவில் 1லட்சம் கோடி டாலர் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

வேளாண் துறையில் எங்களுக்கு குளிரூட்டப்பட்ட கிடங்குகள் வசதி தேவைப்படுகிறது.ஐக்கிய அரபு எமிரேட் இந்த வணிகத்தை மேற்கொள்வது சாதகமான விஷயம்ஆகும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்தியாவில் சுற்றுலாத்துறையில் உள்ள வாய்ப்புகள் கண்டறியப்படாமல் உள்ளன. விருந்தோம்பல் அளிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. அடுத்த 7ஆண்டுகளில் 5கோடி குறைந்த விலை வீடுகளை கட்டுவதற்கு விரும்புகிறோம் என யு.ஏ.இ முதலீட்டாளர்கள் சந்திப்பின்போது பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்தியாவின் வளர்ச்சி திறனும் ஐக்கிய அரபு எமிரேட்டின் வலிமையும் ஆசியாவின் நு◌ாற்றாண்டை உருவாக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக் கை தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago