முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நொறுங்கி விழுந்த இந்தோனேசிய விமானத்திலிருந்து 54 உடல்கள் மீட்பு

செவ்வாய்க்கிழமை, 18 ஆகஸ்ட் 2015      உலகம்
Image Unavailable

ஜகர்த்தா: இந்தோனேசியாவில் பப்புவா மாகாண தலைநகர் ஜயபுராசவுத்தில் இருந்து ஒக்சிபில் நகருக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 49 பயணிகள் 5 விமான ஊழியர்கள் என மொத்தம் 54 பேர் பயணம் செய்தனர். பயணிகளில் 5 பேர் குழந்தைகள் ஆவர். இந்த இந்த விமானம் பப்புவா மாகாணத்தில் மலை மீது பறந்தபோது சிகரத்தில் மோதி பள்ளித்தாக்கில் விழுந்து நொறுங்கியது. எனவே அதில் பயணம் செய்தவர்கள் அனைவரும் பலியாகிவிட்டனர். அதை தொடர்ந்து விமானத்தை தேடும் பணி நடந்தது. இறுதியில் நொறுங்கிய விமானத்தின் பாகங்கள் பப்புவா மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் ஆழமான பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு சென்ற மீட்பு படையினர் விமானத்தில் பயணம் செய்த 54 பேரின் உடல்களையும் மீட்டனர். இத்தகவலை இந்தோனேசிய அதிகாரி மேஜர் ஜெனரல் ஹெரோனிமஸ் குரு தெரிவித்தார். விமானத்தின் கருப்பு பெட்டியும் மீட்கப்பட்டுள்ளது. அதை பரிசோதனை செய்தால் விபத்துக்கான உண்மையான காரணம் தெரியும் என இந்தோனேசியட போக்குவரத்து அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜுலியங் அரிவதா பரதா தெரிவித்தார். இதற்கிடையே விபத்துக்குள்ளான விமானத்தில் கிராமபுற வளர்ச்சி திட்டத்துக்காக ரூ. 3 கோடி பணம் எடுத்து செல்லப்பட்டது. விமானம் விபத்துக்குள்ளானதால் அவைகாற்றில் பறந்து விட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்