முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாய்லாந்து குண்டுவெடிப்பு: தீவிரவாதிகளை பிடிக்க நாடு முழுவதும் வேட்டை

செவ்வாய்க்கிழமை, 18 ஆகஸ்ட் 2015      உலகம்
Image Unavailable

பாங்காக்: தாய்லாந்து தலைநகரம் பாங்காக்கில் எரவான் கோவில் என்ற பிரபல இந்து கோவில் உள்ளது. இது பிரம்மதேவன் கோவிலாகும். இந்த கோவிலை சுற்றி பார்ப்பதற்காக தினமும் பல்லாயிரக்கணக்கானோர் வருவது உண்டு, ஏராளமான வெளிநாட்டினரும் வருவார்கள்.

இந்த கோவிலில் நேற்று முன்தினம் பயங்கர சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. அதில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். 120 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு வெளிநாட்டு தீவிரவாதிகள் காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. பைப் வெடிகுண்டு மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 3 கிலோ டிஎன்டி வெடிபொருளை அதில் பயன்படுத்தி யுள்ளனர். மேலும் வெடிக்காத 2 குண்டுகளும் கோவில் வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வெடிகுண்டு வைத்த தீவிரவாதிகளை பிடிக்க நாடு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. தீவிரவாதிகள் மேலும் சில தாக்குதல்களை நடத்தலாம் என கருதி அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குத்ல தொடர்பாக தாய்லாந்து பாதுகாப்பு துறை மந்திரி வாங்சுவான் கூறும்போது, வெளிநாட்டினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் மூலம் தாய்லாந்தில் பொருளாதாரத்தை சீர் குலைக்க திட்டமிட்டுள்ளனர். சம்மந்தப்பட்ட தீவிரவாதிகளை பிடிக்க எல்லா நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. தனியாக கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணித்து வருகிறோம். ஏராளமானோரை கொன்று குவிக்கும் நோக்கத்துடன் குண்டுகளை வைத்துள்ளனர்.

இறந்தவர்களில் 10 பேர் தாய்லாந்தை சேர்ந்தவர்கள், 2 பேர் சீனாவையும், ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டையும் சேர்ந்தவர்கள். மற்றவர்களுடைய அடையாளங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்