முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐக்கிய அரபு எமிரேட்டில் 2 நாள் பயணத்தை பிரதமர் மோடி நிறைவு செய்தார்

செவ்வாய்க்கிழமை, 18 ஆகஸ்ட் 2015      உலகம்
Image Unavailable

துபாய்: பிரதமர் நரேந்திர மோடி ஐக்கியஅரபு எமிரேட்டில் மேற்கொண்ட தனது 2நாள் பயணத்தை நேற்று நிறைவு செய்தார். துபாயில் அவருக்கு அங்குள்ள இந்திய மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகையில்,ஐக்கிய அரபு எமிரேட்டில் 26லட்சம் இந்தியர்கள் இருக்கிறார்கள். அரபு எமிரேட் குட்டி இந்தியாவாக இருக்கிறது.அபுதாயில் இந்து கோவில் கட்டுவதற்கு இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நகயன் நிலம் அளித்திருக்கிறார்.அவருக்கு நமது இந்திய மக்கள் அனைவரும் எழுந்து நின்று பாராட்டு தெரிவிக்க வேண்டும்என்றார்.(வெளிநாடு வாழ் இந்தியர்களும் எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தார்கள்.)

இளவரசரின் மிகப்பெரும் தன்மையை இது காட்டுகிறது.நான் ஐக்கிய அரபு எமிரேட்டிற்கு வந்தபோது இளவரசரும் அவரது 5சகோதரர்களும் விமான நிலையத்திற்கு வந்து எனக்கு அன்பான வரவேற்பை அளித்தார்கள்.இந்தியர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் எனக்கு நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள்.நான் பாஸ்போர்ட்டின் நிறத்தை பார்ப்பது இல்லை. ரத்தத்தின் நிறத்தையே பார்க்கிறேன்.வாஜ்பாய் தலைமையிலான அரசு இருந்தபோது அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டது. அப்போதுஇந்தியாவிற்கு பொருளாதார தடைகள் விதிக்கப்படும் சூழல் காணப்பட்டது. அப்போது உலகில் உள்ள இந்தியர்களின் உதவியை வாஜ்பாய் கேட்டார். அந்த நிலையில் வளை குடா நாடுகளில் உள்ள இந்தியர்கள் மிகவும் பெருந்தன்மையுடன் உதவிகளை அளித்தார்கள்.

தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை நாங்கள் எதிர்க்கிறோம். நான் எந்த நாட்டை குறிப்பிடுகிறேன் என்பதை புத்திசாலியான மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.ஐக்கிய அரபு எமிரேடட் ரூ.4.5லட்சம் கோடி டாலரை முதலீடு செய்ய உறுதி கொண்டுள்ளது.இதன் பலன்களை இந்தியா பெறும் நேரம் தற்போது வந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

துபாய் கிரிக் கெட் ஸ்டேடியத்தில் அவர் உரையாற்றிய போது அங்கு கூடியிருந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் மோடி,மோடி என்று குரல் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago