முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை பாராளுமன்ற தேர்தலில் மகிந்தா ராஜே பக்ஷே தோல்வி ரணில் விக்ரம சிங்கே மீண்டும் பிரதமர்

செவ்வாய்க்கிழமை, 18 ஆகஸ்ட் 2015      உலகம்
Image Unavailable

கொழும்பு: இலங்கை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்தா ராஜபக்ஷே தோல்வியை தழுவினார். பிரதமர் ரணில் விக்ரம சிங்கே மீண்டும்வெற்றி பெற்றார்.அவர் இலங்கையின் 15வது பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்த தேர்தலில் ராஜ பக் ஷேவின் தங்கையும் தோல்வியை தழுவினார்என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நேற்று முன்தினம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவும் முன்னாள் ஜனாதிபதி ராஜ பக் ஷேவும் போட்டியிட்டனர்.ரணில் விக்ரம சிங்கேவின் ஐக்கிய தேசி கட்சி(யு.என்பி) அதிக இடங்களில் வெற்றி பெற்றது. மகிந்தா ராஜ பக்ஷேவின் ஐக்கிய சுதந்திரா கட்சி(யு.பி.எப்.ஏ) இந்த தேர்தலில் பெரும்பின்னடைவை சந்தித்தது.

இந்த தேர்தலில் ராஜ பக்ஷே வெற்றி பெற்றாலும் அவரை பிரதமராக ஆக்க முடியாது என்று சுதந்திரா கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்ரி பால சிறிசேனா திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று தேர்தல் முடிவுகள் வெளியாகின.இந்த தேர்தலில் மகிந்தா ராஜ பக் ஷே படுதோல்வியை தழுவினார்.

இலங்கையில் நடந்த 8வது பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி(யு.என்.பி) முடிவுகள் வெளியான 196இடங்களில் யு.என்.பி கட்சி 96 இடங்களை கைப்பற்றியது.ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி(யு.பி.எப்.ஏ) 83இடங்களில் வெற்றி பெற்றது.இந்த தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் அடிப்படையில் 29 இடங்கள் அந்த கட்சிகளுக்குபகிர்ந்து அளிக்கப்படுகின்றன.

இலங்கை நாடாளுமன்றம் 225இடங்களை கொண்டது ஆகும்.நேற்று மாலை 4.30மணி யளவில்196இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.யு.என்.பி கட்சி பெற்ற வாக்குகள் அடிப்படையில் அந்த கட்சிக்கு மேலும் 13இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.இதன் மூலம் அந்த கட்சி பாராளுமன்றத்தில் 106இடங்களைப்பெறுகிறது.தமிழ் தேசிய கூட்டணி(டி.என்.ஏ) இலங்கை தமிழ் அரசு கட்சி ஆகியவை 14இடங்களை பெற்றன.ஜனதா விமுக்தி பெரமுனா(ஜே.வி.பி) 4இடங்களில் வென்று இருந்தது.இலங்கை முஸ்லீம் காங்கிரஸ்(எஸ்.எல்..எம்.சி)மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி(இ.பி.டி.பி) கட்சி தலா ஒரு இடங்களை பெற்றன.

22தேர்தல் மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் விக்ரமசிங்கேவின்யு.என்.பி கட்சி 11மாவட்டங்களில் பெரும்பான்மை பெற்றது. சுதந்திரா கட்சி 8 மாவட்டங்களில் பெரும்பான்மை பெற்றிருந்தது. தேர்தலில் பதிவான  வாக்குகளில் 45.7சதவீத வாக்குகளை(51லட்சம்வாக்குகள்) யு.என்.பி கட்சி பெற்றிருந்தது. சுதந்திரா கட்சி 47.3லட்சம் வாக்குகளை பெற்றிருந்தது. அந்த கட்சி பதிவான வாக்குகளில் 424சதவீதத்தை பெற்றது.

மேற்கு மாகாணத்தில் 24இடங்களை யு.என்.பி கட்சி கைப்பற்றியது.இந்த மாகாணத்தில் கொழும்பு, கம்பகா, மற்றும் கலுதரா ஆகிய நகரங்கள் உள்ளன.சுதந்திரா கூட்டணி கட்சி  20 இடங்களை இந்த மேற்கு மாகாணத்தில் கைப்பற்றியது. யு.என்.பி தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரம சிங்கே மற்றும் இதரமூத்த தலைவர்கள் கொழும்புவில் போட்டியிட்டார்கள்.அங்கு யு.என்பி கூட்டணி 11இடங்களையும் சுதந்திரா கூட்டணி கட்சி 7இடங்களையும் பெற்றிருந்தன.

இந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே அமோக வெற்றி பெற்றார். அவர் அந்த நாட்டின் 15வது பிரதமராக பதவியேற்கிறார். முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி கட்சியின் வேட்பாளருமான மகிந்தா ராஜ பக்ஷே தோல்வியை தழுவினார். இந்த தேர்தலில் ரணில் விக்ரம சிங்கேவின் ஐக்கிய மக்கள் கட்சிக்கும் ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேனா கூட்டணிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில் ரணில் விக்ரம சிங்கேவின் ஐக்கிய மக்கள் கட்சி அமோக வெற்றி பெற்று இலங்கையில் ஆட்சி அமைக்கிறது.

இதற்கிடையில், தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ள ராஜபக்ச, "நான் பிரதமராகும் கனவு தகர்ந்துவிட்டது. ஐக்கிய தேசிய கட்சியுடனான போட்டியில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டேன். நல்ல போட்டியில் தோல்வியடைந்ததை ஒப்புக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்