முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவில் கட்ட நிலம் அளித்த ஐக்கிய அரபு எமிரேட் அரசுக்கு பிரதமர் மோடி நன்றி

செவ்வாய்க்கிழமை, 18 ஆகஸ்ட் 2015      உலகம்
Image Unavailable

துபாய்: அபுதாபியில் இந்து கோவில் கட்ட நிலம் வழங்கும் ஐக்கிய அரபு எமிரேட் அரசுக்கு துபாயில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கூடியிருந்த 50 ஆயிரம் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முதலில் அபுதாபி சென்ற அவருக்கு அரசு சார்பில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு அவர் துபாய் சென்றார்.

துபாயில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அவர் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். அந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரம் இந்தியர்கள் கலந்து கொண்டனர். அபுதாபியில் கோவில் கட்ட நிலம் வழங்க முடிவு செய்துள்ள பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜயீத் அல் நஹ்யானுக்கு எழுந்து நின்று மரியாதை செய்யுமாறு மோடி தெரிவித்தார்.  அப்போது மோடி கூறுகையில்,

கோவில் கட்ட நிலம் வழங்கும் பட்டத்து இளவரசர், அமீரகம் மற்றும் துபாய் ஆட்சியாளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மதத்தின் பெயரால் தீவிரவாதம் அதிகரித்து வரும் நிலையில் அபுதாபியில் கோவில் கட்ட பட்டத்து இளவரசர் நிலம் அளிக்கிறார். அனைத்து இந்தியர்களும் அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அனைவரும் தங்களின் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று கைதட்டுங்கள் என்றார். இதையடுத்து அரங்கில் இருந்த இந்தியர்கள் தங்களின் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று கைதட்டி பட்டத்து இளவரசருக்கு நன்றி செலுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்