முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புலிகளை பாதுகாக்கும் இயக்கம்: அமிதாப்பை தொடர்ந்து சச்சின் தூதுவராகிறார்

செவ்வாய்க்கிழமை, 18 ஆகஸ்ட் 2015      விளையாட்டு
Image Unavailable

மும்பை: அழிவை எதிர்நோக்கி வரும் புலிகளை காக்கும் மகாராஷ்டிர அரசின் இயக்கத்தில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுகல்கர் இணையவுள்ளார். உலக புலிகள் தினத்தையொட்டி கடந்த ஜூலை 29-ம் தேதி, நடிகர் அமிதாப் பச்சன், கிரிக்கெட்  வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு மகாராஷ்டிர நிதி மற்றும் வனத்துறை அமைச்சர் சுதிர் முங்கந்திவார் கடிதம் எழுதினார். இதில் புலிகளை காப்பதற்கு மாநில அரசு தொடங்கியுள்ள இயக்கம் குறித்தும், இதன் தூதராக தங்களை நியமிப்பதற்கு ஒப்புதல் அளிக்கும்படியும் கேட்டிருந்தார்.

இதற்கு கடந்த 10-ம் தேதி அமிதாப் பச்சன் அளித்த பதிலில், புலிகளை காக்கும் இயக்கத்தின்  தூதராக நியமிக்கப்பட்டால் அதை தான் ஏற்றுக்கொள்வதாக கூறியிருந்தார். இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து கடந்த 13-ம் தேதி அமைச்சர் சுதிருக்கு சச்சின் எழுதிய கடிதத்தில், புலிகளை பாதுகாக்கும் திட்டத்தில் உங்கள் குழு எடுத்துவரும் முயற்சிகளை பாராட்டுகிறேன். இது தொடர்பாக விவாதிப்பதற்காக உங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன்.

நான் விளையாடும் காலத்தில் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, கிரிக்கெட் டெஸ்ட் மேட்ச் ஒன்றில் செஞ்சுரி அடித்தபோது, அந்த வெற்றியை புலிகளுக்கு அர்ப்பணித்ததை நினைவுகூர விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். கடந்த 7 மாதத்தில் மட்டும் 45க்கும் மேற்பட்ட புலிகள் பல்வேறு காரணங்களால் இறந்துள்ளதை அடுத்து புலிகளை பாதுகாக்க இது மாதிரியான நடவடிக்கையை மகாராஷ்டிர அரசு மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago