முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் - தீபிகா பல்லிகலுக்கு திருமணம் நடைபெற்றது

புதன்கிழமை, 19 ஆகஸ்ட் 2015      விளையாட்டு
Image Unavailable

சென்னை: விளையாட்டு உலகின் ஜோடியான தினேஷ் கார்த்திக் - தீபிகா பல்லிக்கல் திருமணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. நேற்று நடந்த திருமணம் தீபிகாவின் மதமான கிறிஸ்தவ முறைப்படி சர்ச்சில் நடத்தப்பட்டது. இன்று தினேஷ் கார்த்திக் மதப்படி இந்து முறைப்படி இன்னொரு திருமணம் நடைபெறவுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி வீரரான தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக்கும், சென்னையில் வசிக்கும் இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலில் விழுந்தனர்.இதைத் தொடர்ந்து திருமண நிச்சயமும் செய்து கொண்டனர். எனினும், அவரவர் விளையாட்டுகளில் பணிச்சுமை நெருக்கியதால் அதில் மும்முரமாகினர்.

இந்நிலையில் ஒருவழியாக தினேஷ் கார்த்திக்-தீபிகா பல்லிக்கல் திருமணம் கிறிஸ்தவ முறைப்படி சென்னையில் நடந்தது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், விளையாட்டு பிரபலங்கள் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினர். அவர்களுடைய திருமணம் இன்று இந்து முறைப்படியும் நடக்க இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ணகுமார் தினேஷ் கார்த்திக் ஒரு இந்திய கிரிக்கெட் வீரர். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். விக்கெட் கீப்பரும் ஆவார். 2004இலிருந்து இந்தியாவுக்காக விளையாடுகிறார். தீபிகா பல்லிக்கல் என்று அறியப்படும் தீபிகா ரெபக்கா பல்லிக்கல் 21 செப்டம்பர் 1991 ஆம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த சிரியன் கிறித்தவ பெற்றோருக்கு மகளாக சென்னையில் பிறந்தார். தற்போது திருமணம் செய்து கொண்டுள்ள இவர்கள் கடந்த நவம்பர் 15, 2013 ஆம் ஆண்டு திருமண நிச்சயம் செய்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago