முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை தேர்தலில் வெற்றி: ரணில் விக்ரமசிங்கேவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதன்கிழமை, 19 ஆகஸ்ட் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ரணில் விக்ரமசிங்கேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா, இலங்கை இடையே உறவு மேலும் வலுப்பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் செவ்வாய்கிழமை வெளியானது. இதில், ஐக்கிய தேசிய கட்சி அமோக வெற்றி பெற்று, ரணில் விக்கிரமசிங்கே மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.  இந்நிலையில், அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது.

தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள ரணில் விக்ரமசிங்கேவுடன் தொலைபேசி மூலம் பேசினேன். அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். ரணில் தலைமையில், இந்தியா இலங்கை இடையிலான உறவு மேலும் வலுப்படும் என்ற நம்பிக்கையுள்ளது. அமைதியாக தேர்தல் நடந்ததற்காக இலங்கை மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago