முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈவிகேஎஸ் இளங்கோவனை கைது செய்வதற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

வெள்ளிக்கிழமை, 21 ஆகஸ்ட் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை அலுவலக பெண் ஊழியரை தாக்கியது தொடர்பான வழக்கில் அக்கட்சி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை கைது செய்வதற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

தமிழக காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை அலுவலக பெண் ஊழியர் வளர்மதி அக்கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அறக்கட்டளை மேலாளர் நாராயணன் மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார் . அதில், ‘தமிழக காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளைக்கு சொந்தமான காமராஜர் அரங்கத்தின் நிர்வாக அலுவலகத்தில் கடந்த 24 ஆண்டுகளாக உதவியாளராக வேலை செய்து வருகிறேன். காமராஜர் அரங்கம் வாடகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கின்ற கோடிக்கணக்கான பணத்தை காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், காமராஜர் அரங்கத்தின் மேலாளர் நாராயணன் ஆகியோர் பொய் கணக்கு எழுதி, அபகரித்து வருகின்றனர். இதுகுறித்து நான் கேட்டபோது, அவர்கள் என்னை உருட்டுக்கட்டையால் தாக்கினார்கள். கொலை மிரட்டலும் விடுத்தார்கள்’ என்று கூறியிருந்தார்.

இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு , போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் அனுப்பி வைத்தார். இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு இளங்கோவன், நாராயணன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர் .
அதில், தமிழ் நாடு முதல் அமைச்சர் ஜெயலலிதாவை, பிரதமர் நரேந்திரமோடி தனிப்பட்ட முறையில் சந்தித்தது தொடர்பாக, தான் பேசியதற்காக முதல் அமைச்சர் சார்பில் பல்வேறு கோர்ட்டில் பொய்யாக அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேலையில் இருந்து நீக்கப்பட்ட பெண் ஊழியரை வைத்து, அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் தன் மீது பொய்யாக புகார் கொடுக்க வைக்கப்பட்டுள்ளது.

புகார்தாரர் வளர்மதி, கடந்த மார்ச் மாதமே வேலையை விட்டு நீக்கப்பட்டார் . இதை எதிர்த்து அந்த ஊழியர் தொழிலாளர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இப்போதைய அரசியல் காரணத்துக்காக இவரை வைத்து, பொய் புகார் கொடுக்க வைக்கப்பட்டுள்ளார் . அந்த புகாரில் சம்பவம் நடந்ததாக கூறும் நாள் , நேரம் எதுவும் குறிப்பிடவில்லை.

இந்த வழக்கில் இரண்டாவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நாராயணன், அறக்கட்டளையின் நிர்வாக அதிகாரி. இந்த புகாருக்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவருக்கு என்பது வயதாகிறது என்று கூறப்பட்டிருந்தது .

இந்த வழக்கு நீதிபதி எஸ். வைத்தியநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் வி. பிரகாஷன் , பால் வசந்த குமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர் . அப்போது, அவர்கள் இந்த வழக்கு அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் போடப்பட்டது. மனுதாரர்களுக்கு முன ஜாமீன் கொடுக்க வேண்டும் என்று வாதிட்டனர்.

அரசு வக்கீல் சண்முக வேலாயுதம் ஆஜராகி, இந்த மனுவுக்கு பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என்றார் . அப்போது மனுதாரர்களை அதுவரை கைது செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டனர் . ஆனால் அதற்கு நீதிபதி மறுத்து விட்டார் . இந்த வழக்கில் தான் எந்த இடைக்கால தடையும் விதிக்க போவதில்லை என்று தெரிவித்தார் . பின்னர் வழக்கு விசாரணையை வரும் திங்கள் கிழமைக்கு நீதிபதி தள்ளி வைத்தார் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago