முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெற்கு சீன கடலுக்கு அடியில் வேவு பார்க்கும் கருவி சீனா அதிர்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 23 ஆகஸ்ட் 2015      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்: அயல்நாடு ஒன்று தெற்கு சீன கடல் பகுதியில் தங்கள் நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டுமென்றே கண்காணிப்புக் கருவியை விட்டுச் சென்றுள்ளனர் என்று சீனா சாடியுள்ளது. தெற்கு சீன கடல் பகுதியில் நீருக்கடியில் ரோபோ ஒன்றை சீனா கண்டுபிடித்துள்ளது. இதன் மூலம் படங்கள் மற்றும் செயற்கைக் கோள் ஆகியவற்றை மேற்கொள்ள முடியும் என்கிறது சீனா.

ஹைனன் மாகாணத்திலிருந்து ஹுவாங் யுன்லாய் என்பவர் மீன் பிடிக்கும் போது ஒரு மீட்டர் நீளமுடைய கருவி ஒன்றை 3 ஆண்டுகளுக்கு முன்பு கண்டெடுத்தார்.  தற்போது அது நீரடி கண்காணிப்பு-வேவு கருவி என்பது உறுதியாகியுள்ளது என்கிறது சீனா.  மேலும், சில கருவிகளும் தெற்கு சீன கடலுக்கடியில் வைக்கப்பட்டிருக்கலாம் என்று சீனா மேலும் தனது அச்சத்தை தெரிவித்துள்ளது. தெற்கு சீன கடல் பகுதிக்கே இது “மறைவான அபாயங்களை’ தோற்றுவித்துள்ளது என்று சீனா குற்றம் சாட்டியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்