முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி அணியிலிருந்து ஷேவாக் விலகல்

ஞாயிற்றுக்கிழமை, 23 ஆகஸ்ட் 2015      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி: இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர ஷேவாக் 1997ஆம் ஆண்டு முதல் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால், நடைபெறவுள்ள உள்ளூர் போட்டியில் டெல்லி அணியில் இருந்து விலகி ஹரியானா மாநில அணியுடன் இணைந்து விளையாட உள்ளார்.

இது குறித்து ஷேவாக் கூறுகையில், ”ஹரியானா அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாட இருப்பதை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன். இளைஞர்கள் அதிகம் உள்ள அணியுடன் இணைந்து விளையாட இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

உடைமாற்றும் அறையில், இளம் வீரர்களுடன் ஏராளமான விஷயங்களை பகிர்ந்து கொள்ள முடியும். எனது அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ள முடியும். மேலும், அவர்களுடைய செயல்பாடுகளை நம்பிக்கையான முறையில் வடிவமைக்க வழிவகுக்க முடியும்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்