முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியலில் இருந்து விலக மாட்டேன் நடிகர் சிரஞ்சீவி உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 23 ஆகஸ்ட் 2015      அரசியல்
Image Unavailable

நகரி: சினிமாவில் நடித்தாலும் அரசியலில் இருந்து விலக மாட்டேன் என்று தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தெரிவித்தார். நடிகர் சிரஞ்சீவி தனது 60வது பிறந்த நாளையொட்டி ஹைதராபாத்தில் சனிக்கிழமையன்று கொண்டாடினார். இந்த பிறந்த நாள் விழாவில் இந்திய திரைப்பட நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர். சிரஞ்சீவி அரசியலில் இருந்து ஒதுங்கி சினிமாவில் நடிக்க வேண்டும் என நடிகை ஶ்ரீதேவி கூறினார்.

இதனை சிரஞ்சீவி ஏற்க மறுத்து விட்டார். இது குறித்துஅவர் கூறியதாவது, வாழ்க்கை என்பது அழகான நினைவு அதில் 60வயது காண்பது ஒருபக்கம். எனக்கு 60வயது ஆகிவிட்டதுஎன்று நான் நினைக்கவில்லை. 20 வயது இளைஞனாகவே என்னை நினைக்கிறேன். நான் சினிமாவுக்கு வரும்போது எ ப்படி இருந்தேனோ அதேப்போன்றுதான் தற்போதும் இருக்கிறேன்,.அரசியலில் தற்போது தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது நான் சினிமாவில் நடிக்க வந்துள்ளேன்.எனது 150வது படம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நல்ல கதையை தேர்வு செய்து வருகிறேன்.சினிமாவில் நடித்தாலும் நான் அரசியலில் இருந்து விலக மாட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்