முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்த வேண்டும்: மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

திங்கட்கிழமை, 24 ஆகஸ்ட் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

2015–16ல் பயிர் ஆண்டிற்கு விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கிய நெல்லுக்கான ஆதார விலை போதுமானதல்ல. பா.ஜ.க.வினர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தேர்தல் அறிக்கையில் உற்பத்தி விலையில் (அடக்க விலை) 50 சதவிகிதத்தை சேர்த்து குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படும் என்றனர்.

எனவே தாங்கள் அளித்த வாக்குறுதிக்கு ஏற்பவும், விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டும் நெல்லுக்கான ஆதார விலையை மத்திய அரசு கூடுதலாக வழங்க வேண்டும்.விவசாயிகள், விதை உற்பத்தியாளர்கள் மற்றும் விதைச் சான்றளிப்புத்துறை அலுவலர்கள் அடங்கிய முத்தரப்பு ஆலோசனைக் கூட்டத்தை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கூட்டி மார்க்கெட் மதிப்புடைய, உயர் விளைச்சல் தரக்கூடிய குறுகிய கால மற்றும் மத்திய கால ரகங்களை வெளியிடுவது பற்றியும் ஏற்கனவே உள்ள ரகங்களின் வல்லுநர் விதைகளை மேம்பாடு செய்வது பற்றியும் கலந்துரையாட வேண்டும்.விதைப் பரிசோதனை நிலையத்துடன் கூடிய விதைச்சான்று உதவி இயக்குனர் அலுவலகம் அமைத்திட வேண்டும். விதைச்சான்று துறையில் தேவையான கூடுதல் பணியிடங்களை தோற்றுவிக்க வேண்டும்.தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வழங்கும் அறிவிக்கப்பட்ட ரகங்களின் வல்லுநர் விதைகளின் தரத்தினை மேம்படுத்தி பிற ரகக் கலப்பின்றி (சிவப்பு அரிசி) வழங்கிட வேண்டும்.

விதைச் சான்றளிப்பு துறை கையேட்டில் செய்யப்படும் மாறுதல்களை விதைச்சங்க நிர்வாகிகளிடம் ஆலோசித்த பிறகு நடைமுறைப்படுத்த வேண்டும்.விதைச் சுத்திகரிப்பு நிலையம் உரிமம் வழங்கும் அதிகாரத்தை விதை சான்று உதவி இயக்குனரிடம் இருந்து விடுவித்து விதை சான்று இயக்குனரே வழங்கிட வேண்டும்.விதைச் சான்றளிப்புத் துறையில் உள்ள சட்ட அலுவலர் பதவியினை முழு நேர அலுவலரை கொண்டு நிரப்பி விதை சட்ட நடவடிக்கைகள் எடுக்கும் போது ஏற்படும் பாதிப்புகளை உற்பத்தியாளர்கள் துறைக்கு தெரியப்படுத்த ஆவண செய்ய வேண்டும்.எனவே விதைச்சங்கத்தினரின் கோரிக்கைகளை தமிழக அரசு கவனத்தில் கொண்டு வேளாண் தொழில் சிறக்கவும், அத்தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்கள் நலன் காத்திடவும், விவசாயத் தொழில் பெருகவும் செயல் திட்டங்களை வகுத்து நிறைவேற்றிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago