முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவூதி அரேபியாவில் பெண்கள் வாக்களிக்க முதல்முறையாக அனுமதி

திங்கட்கிழமை, 24 ஆகஸ்ட் 2015      உலகம்
Image Unavailable

துபாய்: சவூதி அரேபியாவில் முதன்முறையாக வரும் டிசம்பர் தேர்தலில் பெண்கள் வாக்களிக்கவும், தேர்தலில் நிற்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெண்கள் பெயரை சேர்க்கும் பணி நேற்று முன்தினம் முதல் மெக்கா மற்றும் மதீனாவில் தொடங்கியது.

சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பெண்களுக்கு தேர்தலில் வாக்களிக்க உரிமை இல்லை. இது தவிர திருமணம் ஆகாத பெண்கள் ஆண்கள் துணையில்லாமல் வெளியில் வரக்கூடாது. ஆண்கள் பங்கேற்கும் விளையாட்டு போட்டிகளை மைதானத்துக்கு சென்று நேரில் பார்க்கக்கூடாது என அவர்களுக்கு பலவித மான கட்டுப்பாடுகள் உள்ளன. இந்நிலையில் சவூதி அரேபியாவில் வரும் டிசம்பர் 12ம் தேதி நடைபெற இருக்கும் நகராட்சி தேர்தலில் முதல் முறையாக பெண்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் முதல் முறையாக பெண்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பெண்கள் போட்டியிடவும், வாக்களிக்கவும் சவூதி மன்னர் ஒப்புதல் அளித்துள்ளார். இதை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெண்கள் பெயரை சேர்க்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முக்கிய நகரமான மெக்கா மற்றும் மதீனாவில் நேற்று முன் தினம் முதல்  பெண்கள் பெயர் பதிவு பணி தொடங்கியது. பெண்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று தங்கள் பெயர்களை பதிவு செய்தனர்.

மற்ற நகரங்களில் வரும் 30ம் தேதி முதல் பெயர் பதிவு தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். செப்டம்பர் 20 வரை பெண்கள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சம்பயத்தில் பெண்களுக்கு என தனி வாக்குசாவடிகள் அமைக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்