முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.எஸ்.தீவிரவாதி ஜிகாதி ஜானை பிடிக்க பிரிட்டன் பிரதமர் கமரூன் உத்தரவு

திங்கட்கிழமை, 24 ஆகஸ்ட் 2015      உலகம்
Image Unavailable

லண்டன்: ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் உள்ள ஜிகாதி ஜான் வெளியிட்டுள்ள வீடியோவில் தான் பிரிட்டன் திரும்பி பல பேரின் தலைகளை வெட்டி வீழ்த்துவேன் என எச்சரித்துள்ளார்.இந்த நிலையில் உயிருடன் பிடிக்கவோ அல்லது கொல்லவோ வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன்  தனது நாட்டு உளவுத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் அமைப்பு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த தீவிரவாத அமைப்பு பிரிட்டன், அமெரிக்கா , ஜப்பான் நாடுகளின் நபர்களை தலையை வெட்டி கொடூர கொலை செய்திருக்கிறது. இந்த தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் முகமது எம் வாசி .இவரது இன்னொரு பெயர் ஜிகாதி ஜான் என்பதாகும் .இந்த பெயரை மேற்கத்திய பத்திரிகைகள் சூட்டியுள்ளன.27வயது ஆகும் ஜான் விரைவில் பிரிட்டன் திரும்பி இன்னும் பலரின் தலைகளை வெட்டி வீழ்த்துவேன் என்று ஒரு வீடியோவில் சூளுரைத்துள்ளார். இந்த நபர் பிரிட்டனைச்சேர்ந்தவர். அவர் பிரிட்டன் மக்கள் பேசும் உச்சரிப்புடனேயே பேசுகிறார்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒரு நிமிடம் 17வினாடி ஓடுவதாக இருக்கிறது. இந்த வீடியோவில் ஜிகாதி ஜான் விடுத்துள்ள சூளுரையில் தான் தொடர்ந்து பலரின் தலைகளை வெட்டி வீழ்த்துவேன் என்று கூறியிருக்கிறார்.

சமீபத்தில் சிரியாவில் 7பேரின் தலைகளை வெட்டி கொன்ற ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் நடவடிக் கைகள் அனைத்திலும் இந்த ஜிகாதி ஜான் இடம் பெற்றிருக்கிறார். கொல்லப்பட்ட 7 பிணைக்கைதிகளில் இருவர் பிரிட்டனைச்சேர்ந்தவர்கள் ஆவார்கள். லண்டனைச்சேர்ந்த டெய்லி மெயில் வெளியிட்டுள்ள செய்தியில் 27வயது ஜிகாதி ஜான் விரைவில் பிரிட்டன் திரும்ப இருப்பதாகவும் பலரின் தலைகளை வெட்டி வீழ்த்த இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

கடந்த ஜனவரி மாதம் ஜப்பானிய பிணைக்கைதி கென்ஜி கோடோவின் தலையை ஐ.எஸ் தீவிரவாதிகள் வெட்டிக் கொன்றனர்.இந்த கொலையில் தொடர்புடைய ஜான் லண்டனைச்சேர்ந்த 27வயது இளைஞர் என்பது பிப்ரவரிமாதம் அடையாளம் காணப்பட்டது. ஜிகாதி ஜான் தனது உடல் முழுவதையும் கறுப்பு உடையால் மறைத்துக் கொண்டிருக்கிறார். கடந்த 2014ம்ஆண்டு ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு 7வீடியோக்களை வெளியிட்டது. அதில் அனைத்திலும் ஜான் இடம் பெற்றிருக்கிறார்.

அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலியை ஜிகாதி ஜான் வெட்டி கொன்று இருக்கும் காட்சியில் அந்த வீடியோவில் இடம் பெற்றிருந்தது. 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க பத்திரிகையாளர் ஸ்டீவ் ஸ்காட்லாப் மற்றும் பிரிட்டிஷ் நிவாரண உதவி ஊழியர் டேவிட் ஹெய்ன்ஸ் ஆகியோரின் தலையை வெட்டிக் கொன்ற வீடியோவிலும் ஜிகாதி ஜான் இடம் பெற்றிருக்கிறார். லண்டனில் பிறந்த ஜிகாதி ஜானை கொல்வதற்கு பிரிட்டன் உளவுத்துறை இரு மடங்கு முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என பிரிட்டன் பிரதமர் கமரூன் உத்தரவிட்டுள்ளார்.ஜிகாதி ஜான் கம்யூட்டர் நிபுணர் ஆவார். அவர் பிரிட்டன் பிணைக்கைதிகளை சிரியாவில் தலையை வெட்டி கொலை செய்திருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்