முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி: சட்டசபையில் ஜெயலலிதாவுக்கு சபாநாயகர் பாராட்டு

திங்கட்கிழமை, 24 ஆகஸ்ட் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: தமிழக சட்டசபை  நேற்று காலை 10 மணிக்கு கூடியது. இந்த கூட்டத்தில் பங்கேற்க முதல் – அமைச்சர் ஜெயலலிதா 9.50 மணிக்கு தலைமை செயலகத்துக்கு வந்தார்.சட்டசபை வாசல் அருகே அவரை சபாநாயகர் தனபால், அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அரசு கொறடா மனோகரன், சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் ஆகியோர் வரவேற்றனர்.

அதன்பிறகு 9.57 மணிக்கு சட்டசபைக்குள் ஜெயலலிதா வந்தார்.அவரை பார்த்ததும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் எழுந்து நின்று மேஜையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வரவேற்றனர்.புரட்சித் தலைவி அம்மா வாழ்க என்றும் முழக்கமிட்டனர். பதிலுக்கு ஜெயலலிதா அனைவரையும் பார்த்து கும்பிட்டார். பின்னர் 10 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்கியது. சபாநாயகர் தனபால் முதல் – அமைச்சர் ஜெயலலிதாவை வரவேற்று பேசினார்.ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு முதன் முறையாக சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க வந்ததால் அவர் முதல் – அமைச்சர் ஜெயலலிதாவை வரவேற்று விரிவாக வாழ்த்தி பேசினார். அவர் பேசியதாவது:–

எதுவும் இல்லை. . . .
இருக்கவே இருக்காது.
தர்மமே வெல்லும் என பகவத் கீதை உரைக்கிறது.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வினாலும் . . .
மாண்புமிகு அம்மா அவர்கள்.
மாண்புமிகு அம்மா அவர்கள்.
கடவுளையும் விடுவதில்லை.
சத்தியமாய் வெல்லாமல் விட்டதில்லை.
அள்ளிக் கொடுக்கும்.
அள்ளிக் கொடுக்கும்.
சத்தியமே வெல்லும். . . .
தர்மமே வெல்லும் . . .
ஆம் . . .
தர்மம் வென்றது.
ஆர். கே. நகர் தொகுதியில்
ஒன்றரை இலட்சம் வாக்குகள் அதிகம் பெற்று,
பேரவைக்கு வருகை புரிந்துள்ளார்கள்.
நற்சான்று அளிக்கும் வெற்றி.
உன்னத வெற்றி.
முடிசூடி வந்துள்ள முழுமதியே வருக! வருக என வரவேற்கிறேன்.
சிம்மம் சிம்மாசனத்தில் . . .
வரவேற்கிறோம் . . . சிவப்புக் கம்பளத்தில்.
பேரவையிலே குலசாமி . . பேருவகையில் . . . இப்பூமி.
மாதரசி வந்துள்ளார்.
மகா சக்தியாக வந்துள்ளார்.
புகழரசி வருகையால், பேரவையும் வெற்றி நடையில்.
தரணி முழுவதும் ஒலிக்கட்டும்.
பத்து கோடி தமிழ் இனமும் பயன் பல பெற்று,
நலமோடு, புகழோடு, உயர்வோடு, வளமோடு, சிறப்போடு
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
மாண்புமிகு அம்மா அவர்களை வருக, வருக என பணிந்து வணங்கி, வரவேற்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

ஜெயலலிதாவை சபாநாயகர் பாராட்டி பேசும் போது அ.தி.மு.க. உறுப்பினர்கள் மேஜையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். சபாநாயகர் பேசி முடித்ததும் முதல் – அமைச்சர் ஜெயலலிதா இருக்கையில் இருந்து எழுந்து நின்று உறுப்பினர்கள் அனைவருக்கும் சிரித்த படி வணக்கம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்