முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நோயற்ற வாழ்வை மக்களுக்கு வாரி வழங்கிய அம்மா தான் எங்களது குறைவற்ற செல்வம் : சட்டசபையில் அமைச்சர் விஜயபாஸ்கர் புகழாரம்

செவ்வாய்க்கிழமை, 25 ஆகஸ்ட் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: நோயற்ற வாழ்வை மக்களுக்கு வாரி வழங்கிய முதல்வர் ஜெயலலிதா தான் எங்கள் குறைவற்ற செல்வம் என்று நல்வாழ்வுத் துறைக்கு புதிய திட்டங்களை அறிவித்தமுதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சட்டபேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்தார்.

தமிழக சட்டபேரவையில் 110 வது விதியின் கீழ் மக்கள் நல்வாழ்வுத்துறையில் 22 நலத்திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அந்த அறிவிப்புகளுக்கு நன்றி தெரிவித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: வையத்து நன்மைக்கேஎன் வாழ்வென்று உணர்த்தியவரலாற்று பெட்டகமே!வையமும், வானமும் ஒருங்கே வணங்கும்ஞானத்திருவுருவே!பூவுலக அதிசயமே!புண்ணியத்தின் பொக்கிஷமே!தாங்கள் இறைவன் தந்த வரம்இனி வெற்றியே என்றம் நிரந்தரம்!ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்குஆதாரம்சுகாதாரம்தான்என்பதை நன்கு அறிந்தவர் நம் அம்மா தீர்க்கதரிசனமாய் தீட்டும்ஒவ்வொரு திட்டமும்நோயற்ற வாழ்வை மக்களுக்கு வாரி வழங்குவதால்அம்மா தாங்கள்தான் எங்கள் குறைவற்ற செல்வம்.நல்லாரொருவர் உளரேல் அவர் பொருட்டுஎல்லாருக்கும் பெய்யும் மழை...

ஆம். பல நூறு கோடி ரூபாயில், பார்போற்றும் திட்டங்கள்,அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் அம்மா சிறப்பு மகளிர் முழு உடல் பரிசோதனை திட்டம்) அம்மா ஆரோக்கியத் திட்டம்அம்மா மகப்பேறு சஞ்சீவினி திட்டம்புதிய பல் மருத்துவக் கல்லூரி,\புற்றுநோய் ஒப்புயர்வு மையம்,எனதங்கள் அன்பெனும் மழையால்தமிழகத்தில் அகன்றோடிவிட்டது நோய்....தாங்கள் தான் ஆரோக்கியம் தந்த தாய்.. அம்மா புதுக்கோட்டைக்கு மருத்துவக் கல்லூரி எனும்வரம் வழங்கிச் சிறப்பித்தீர்கள்...தாங்கள்வரம் தந்த இக்கோட்டைஎன்றும் தங்களின் நிரந்தரக் கோட்டை..புதுக்கோட்டை..\தங்களால் ஆனது புகழ்கோட்டை...இந்தத் தலைமுறை மட்டுமல்லஎந்த தலைமுறையும் அம்மா தங்கள் பாதங்களைநன்றியால் நனைத்துக் கொண்டேயிருப்போம்ஒவ்வொரு நொடியும் இந்த நன்றியை நினைத்துக் கொண்டேயிருப்போம். இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்