முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனது கிரிக்கெட் வாழ்க்கையில் சவாலாக இருந்தவர் ஜாகீர்கான்: சங்ககாரா

செவ்வாய்க்கிழமை, 25 ஆகஸ்ட் 2015      விளையாட்டு
Image Unavailable

கொழும்பு - இலங்கையின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான குமார் சங்ககரா. சர்வதேச போட்டியில் இருந்து இந்தியாவிற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியுடன் விடை பெற்றார்.  134 டெஸ்டில் விளையாடி 12,400 ரன்கள் குவித்துள்ளார் சங்ககாரா. இதில் 38 சதம், 52 அரை சதம் அடங்கும்.பிரியாவிடை பின் அவர் கூறியதாவது: இந்த தொடரில் அஸ்வின் எனக்கு சவாலாக இருந்தார். 4 இன்னிங்சுகளிலும் அஸ்வின் பந்தில் அவுட் ஆனேன்.

ஆனால் எனது 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் (இந்தியா), சுழற்பந்து வீச்சாளர் கிரீம் ஸ்வான் (இங்கிலாந்து) ஆகியோரது பந்துவீச்சை எதிர்கொள்வதுதான் சவாலாக இருந்தது. பல நேரங்களில், இவர்களது பந்துவீச்சில் என்னால் சிறப்பாக செயல்பட இயலவில்லை. இருப்பினும் யுத்திகளை மாற்றிக்கொண்டு இவர்களை எதிர்கொள்ள முயற்சி செய்துள்ளேன். வாசிம் அக்ரம் பந்து வீச்சு ஸ்டைல் சிறப்பாக இருக்கும்.

நல்லவேளை அவரது பந்துவீச்சு காலத்தில் நான் இளம் வீரராக இருந்தேன். அப்படியும், ஒருமுறை அவரது பந்து வீச்சில் அவுட் ஆகியுள்ளேன். பிராட்மேனுக்கு சமமான வீரர் என்று என்னைப் பற்றி எனது பயிற்சியாளர் கூறியுள்ளார். அவர் அநேகமாக ஜோக் அடித்திருப்பார் என்று நினைக்கிறேன். ஏனெனில், பிராட்மேன் பேட்டிங்கை நான் வீடியோவில் பார்த்து இருக்கிறேன். அவர் ஒரு அபூர்வமான வீரர் ஆவார். கிரிக்கெட் சகாப்தத்தில் அவர்தான் சிறந்த வீரர். அவருடன் யாரையும் ஒப்பிட இயலாது. இவ்வாறு சங்ககாரா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்