முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானிஸ்தானில் சமையல் எரிவாயு ஆலை வெடிவிபத்தில் 11 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 25 ஆகஸ்ட் 2015      உலகம்
Image Unavailable

காபுல் - ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஹேரட் நகரில் சமையல் எரிவாயு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் அருகாமையில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்த 10 குழந்தைகள் உள்பட 11 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம் ஆலையில் ஏற்பட்ட விபத்தால் நிகழ்ந்ததா அல்லது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலால் ஏற்பட்டதா என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இவ்விபத்தில் காயமடைந்த சுமார் 20 பேர் ஹேரட் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஷியா-சன்னி பிரிவினருக்கு இடையில் பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரின் விளைவாக வீடுகளை இழந்து விபத்து நிகழ்ந்த இந்த சமையல் எரிவாயு ஆலையின் அருகே தற்காலிக கூடாரங்களை அமைத்து அகதிகளாக தங்கியுள்ளனர். அவர்களின் குழந்தைகள் இந்த விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago