முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அரசு பொது மருத்துவமனை டாக்டர்கள், மாணவர்கள் நன்றி

புதன்கிழமை, 26 ஆகஸ்ட் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, தமிழக முதல்வர் ஜெயலலிதா  சட்டமன்ற பேரவையில் 110 விதியின் கீழ் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை அறிவித்துள்ளார். 

சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு ரூ.25 கோடியில் புற்றுநோய் இமேஜிங் வசதி மற்றும் ரூ.5 கோடியில் முட நீக்கியல் சிகிச்சை மையத்திற்கு சிறப்பு வசதி, குழந்தைகள் நல மருத்துவமனையில் ரூ.10 கோடியில் மரபியல் காரணங்களால் ஏற்படும் நோயை கண்டறிய உயர்தர ஆய்வகம், அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கும் ரூ.2.50 கோடி செலவில் மின்கல ஊர்திகள், ரூ.6 கோடி செலவில் செவிலியர் குடியிருப்புகள், புதுக்கோட்டையில் புதிய மருத்துவக் கல்லூரி, தென் தமிழகத்தில் புதிய பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றையும், அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம், அம்மா சிறப்பு மகளிர் முழு உடல் பரிசோதனைத் திட்டம், அம்மா ஆரோக்கியத் திட்டம், அம்மா மகப்பேறு சஞ்சீவினி திட்டம் ஆகிய மகத்தான திட்டங்களை அறிவித்துள்ளார்.

நோயற்ற தமிழகத்தை உருவாக்கிட எண்ணற்ற புதிய திட்டங்களையும், மருத்துவமனைகளுக்கு பல்வேறு வசதிகளையும் வழங்கிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆர்.விமலா தலைமையில் உள்ளிருப்பு மருத்துவ அலுவலர்கள் டாக்டர். இளங்கோ, டாக்டர்.ஷீலா, டாக்டர்.ரகுநாதன், டாக்டர் நாராயணன் மற்றும் புற்றுநோய் சிகிச்சை துறை தலைவர், மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இதைபோல அரசு பல் மருத்துவக் கல்லூரியில் முதல்வர் டாக்டர். சரவணன் தலைமையில் துணை முதல்வர் டாக்டர்.ஸ்ரீமதி, நிர்வாக அலுவலர் சந்திரவதனி மருத்துவர்கள், மாணவர்கள் ஒன்றுகூடி இனிப்புகள் வழங்கி முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தனர்.     மேலும், அரசு செவிலியர் கல்லூரியில் மருத்துவக்  கல்வி இயக்குநர் டாக்டர்.கீதாலட்சுமி தலைமையில் கூடுதல் இயக்குநர் லட்சுமி  மற்றும் மாணவர்கள் நன்றி தெரிவித்து  இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்