முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவின் முத்தான 29 திட்டங்கள் மருத்துவர்கள், பொதுமக்கள், மாணவர்கள், சிறு வியாபாரிகள் முதலமைச்சருக்கு நன்றி!

புதன்கிழமை, 26 ஆகஸ்ட் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, சட்டசபையில், முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவத்துறைக்கான  29 புதிய  திட்டங்களை நேற்று அறிவித்தார். இந்த திட்டங்களுக்கு மக்கள் அமோக  வரவேற்பளித்து, முதல்வருக்கு நன்றி கூறி தங்கள் மகிழ்ச்சியினை  வெளிப்படுத்தினர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த நான்காண்டுகளில் ஏராளமான மக்கள் நலத்  திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, சமீபத்தில் அறிவித்த  தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை திட்டத்துக்கு, தமிழகம் மட்டுமல்லாமல்,  மாநிலம் கடந்து பெண்களிடம் அதிகம் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில்,  கடந்த 24ந் தேதியன்று தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தொடரின் 2 ஆம் நாள்  கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா, 110 விதியின் கீழ் 29 அறிவிப்புகளை  வெளியிட்டு பேசினார்.

குறிப்பாக, முதல்வரின் அறிவிப்புகளில், பெண்கள்  நலன் சார்ந்த திட்டங்களான, அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை,  அம்மா ஆரோக்கிய திட்டம், அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம் உள்ளிட்ட  திட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தமிழக முதல்வரின் முத்தான  திட்டங்கள் அனைத்தும், பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று  உள்ளது.

* 5 பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை மையம்
குழந்தைகளுக்கு ஏற்படும் டெங்கு, மூளைக் காய்ச்சல், சாலை விபத்து மற்றும் தற்செயலாக விஷம் அருந்துவது போன்ற அபாயகரமான சூழலிருந்து அவர்களை காப்பாற்ற, தமிழகத்தில் இதுவரை 64 மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இதனை மேலும் வலுப்படுத்த புதியதாக 5 மருத்துவமனைகளில் இம்மையம் நிறுவப்பட இருக்கிறது. தாம்பரம், விருத்தாசலம், குடியாத்தம், திருத்தணி மற்றம் ராஜபாளையம் ஆகிய வெவ்வேறு பகுதிகளில் செயல்பட இருக்கிறது.

இத்திட்டத்தை பற்றி மருத்துவர் ஆர். ஜெயராமன் கூறியதாவது:–

‘‘5 பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு என்பது ரொம்ப அவசியமான ஒன்னு. சரியான வசதிகள் இல்லாததால் சிகிச்சை பலனில்லாம, குழந்தைகள் இறந்துடறாங்க. இதுக்காக மேலும் 5 மையங்கள் 3 கோடியே 25 லட்ச ரூபாய் செலவில் அமைக்கிறது. நிச்சயமாக வரவேற்கத்தக்கது. குழந்தைகள் இறப்பு சதவீதம் பெருவாரியா குறையும்’’ என்றார்.

ரத்த வங்கி
சிகிச்சை நேரத்துல சரியான நிமிடத்துக்கு ரத்தம் கிடைக்காததுனால, நிறைய பேர் இறக்குறாங்க. இதற்காக அரசு அங்கீகாரம் பெற்ற 281 ரத்த வங்கிகளும், 415 ரத்த சேகரிப்பு நிலையங்களும் தமிழ்நாடு முழுக்க இயங்கி வருகிறது. தற்போது புதிதாக 12 கோடியே 12 லட்ச ரூபாய் செலவில் புதிதாக 10 ரத்த வங்கிகளும், ரத்த சேமிப்பு நிலையங்களும் செயல்பட இருக்கின்றன.
இத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில்,

எஸ்.மாரிமுத்து,  கோயம்புத்தூர்
‘‘என்னோட அண்ணனுக்கு விபத்து நடந்து, உயிருக்கு போராடி கிட்டு இருக்கறப்போ சரியான நேரத்துல, அரசு ரத்த வங்கி மூலமா வங்கிகள் மிக அதிகமா, பணம் வசூலிக்கிறாங்க, இப்போ புதுசா 10 மையங்கள் திறக்கிறது. நெஜமாவே மனசுக்கு சந்தோஷமா இருக்கு.
தென் தமிழ்நாட்டில் புதிய அரசு பல் மருத்துவர் கல்லூரி:
இதுவரை அரசு பல்  மருத்துவர் கல்லூரி சென்னையில் ஒன்று மட்டுமே உள்ளது. புதியதாக தென் தமிழ்நாட்டில் புதிய அரசு பல்  மருத்துவர் கல்லூரி ஒன்றை தொடங்க விருப்பதாக முதலமைச்சர் கூறினார். இத்திட்டம் பற்றி மாணவி ஒருவரின் கருத்து.

சென்னை தனியார் கல்லூரி மாணவி செல்வி
‘‘கவர்மெண்ட் பல் மருத்துவ கல்லூரி, சென்னைல மட்டும் தான் இருக்கு. அதுலயும், 35 அட்மிஷன் மட்டும் தான். இதனால, போன வருஷம். நிறைய மார்க் எடுத்தும், எனக்கு சீட் கிடைக்கல. இப்போ தென் தமிழ்நாட்டுல புதிய பல் மருத்துவ கல்லூரி தொடங்கறது சந்தோஷமா இருக்கு. என்னை மாதிரி, வாய்ப்பு கிடைக்காம போனவங்களுக்காக, சீட் எண்ணிக்கையும் 35லிருந்து 58 ஆக கூட்டியிருக்காங்க. அடுத்தடுத்த ஆண்டுகளில் வரும் மாணவர்களுக்கு இது ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்.’’ என கூறினார்.

முழு உடல் பரிசோதனை திட்டம்:
முதலமைச்சர் அறிவித்த இத்திட்டத்தில், முழு ரத்த பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, கல்லீரல் செயல்பாடு, ஹெபட்டைடிஸ் பி பரிசோதனை, நெஞ்சு எக்ஸ்–ரே, தைராய்டு உட்பட 13 முழு பரிசோதனைகள் செய்யப்பட விருக்கிறது.

ரகுராமன், பத்திரிக்கையாளர், சென்னை
முதலமைச்சரோட இந்த திட்டம், ஒரு தொலைநோக்கு பார்வையோட இருக்கிறது என்றுதான் சொல்வேன். ஏன்னா, நோயை எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்கறமோ, அவ்வளவு எளிதா குணப்படுத்தலாம். தனியார் மருத்துவமனைகளில் இந்த மாதிரி பரிசோதனைக்கு, குறைந்தது 20 ஆயிரம் கட்டணம் வசூலிப்பாங்க. ஆனா, மிகக் குறைந்த கட்டணத்தில், முதல்வர் இத செயல்படுத்தப் போறாங்க. மற்ற திட்டங்களை விட, இந்த திட்டம் மூலமா பயன்பெற போறவங்க தான் அதிகம்.’’ என்றார்.

மகப்பேறு சஞ்சீவி திட்டம்
‘‘மகப்பேறு காலத்தில், கருவுற்ற தாய்மார்களின் இன்னல்களைப் போக்க, அன்னபேதி மாத்திரை, கருவேப்பிலை பொடி, நெல்லிக்காய் லேகியம் உட்பட 11 வகை மூலிகை மருந்துகள் கொண்ட பொக்கிஷ கருவுற்ற தாய்மார்களுக்கு வழங்கப்படும்’’ என தெரிவித்தார். சித்த மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் வழங்கப்படும் இதற்கு, ஆண்டு ஒன்றுக்கு ரூ. 10 கோடி செலவிடப்படும் என தெரிவித்தார்.
மதுரை பகுதியை சேர்ந்த சரண்யா என்ற பெண்மணி, முதலமைச்சரின் திட்டம் பற்றி கூறினார்.

சரண்யா, மதுரை
‘‘இந்தியாவிலேயே எந்த அரசும், இப்படியொரு திட்டத்தை செயல்படுத்தியதில்லை. தாய், சேய் நலம் கருதி, இப்படியொரு திட்டத்தை வகுப்பது, முதல்வர் ஜெயலலிதா அம்மா மட்டும் தான். அடுத்த தலைமுறையோட ஆரோக்கியம் தான் முக்கியம்னு மனசுல வச்சுகிட்டு, முதல்வர் இத செஞ்சிருக்காங்க. ஒரு தாய் என்கிற முறையில, முதலமைச்சருக்கு மிகப் பெரிய நன்றி கூறிக்கொள்கிறேன்’’.
கொங்கு மண்டல பொதுமக்கள் வரவேற்பு

அனுஷ்கா–திருநங்கை,, நெல்லித்துறை
முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்கள், எங்களைப் போன்ற திருநங்கைகளுக்கு பெரிதும் பயன்படக் கூடியதாகும். தற்போது முழு உடல் பரிசோதனை திட்டத்தில், பல்வேறு வகையான புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டு உள்ளது. தனியார் மருத்துவமனையில் மட்டுமே செயல்படுத்தி வந்த சிகிச்சை, தற்போது அரசு மருத்துவமனையிலும் கிடைக்கும் என்ற செய்தி, எங்களை போன்ற திருநங்கைகளுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது. இதற்கு திருநங்கைகள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவை செட்டிவீதி, கலைவாணி
முதல்வர் ஜெயலலிதாவின், அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம், அடுத்த தலைமுறையின் நலனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது. ஒரு பெண் தாயாகும் பட்சத்தில், அவருக்கு ஒவ்வொரு காலக் கட்டத்திலும் தேவையான உணவு முறைகளை, அவரை பெற்ற தாய் மட்டுமே கவனத்தில் எடுத்து செய்யக் கூடியதாகும்.

ஆனால், தற்பொழுது முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ள சஞ்சீவி திட்டத்தில், கர்பிணி பெண்களின் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் தேவையான, சத்துக்கள் நிறைந்த மூலிகை மருந்துகள், குழந்தை பிறப்புக்கு பின் தேவையான மருந்துகள், குழந்தைக்கு தேவையானவை என மிகவும் நுட்பமாக சிந்தித்து அறிவித்து உள்ளார். இது நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய பெண்களுக்கான திட்டம். ஆரோக்கியம் நிறைந்த பெண்கள் சமுதாயத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, பெண்கள் சமுதாயமே நன்றி தெரிவிக்க கடமைப்பட்டு உள்ளோம் என தெரிவித்தார்.

கே.சி.த் தோட்டம் சிவகாமி
படிப்பறிவில்லாத, கணவனால் கைவிடப்பட்ட, ஏழை எளிய பெண்கள், அரசு மருத்துவமனையை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு, முதல்வரின் திட்டங்கள் ஒரு வரப்பிர சாதமாகும். முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கும் ஒவ்வொரு திட்டமும், பெண்களின் நேரடி பயன்பாட்டுக்கு உகந்ததாக இருந்து வருகிறது. தற்போது, பல்வேறு விதமான நோய்கள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான சிகிச்சை முறைகள், ஏழை எளிய மக்களின் கனவிலும் நினைத்து பார்க்க முடியாது. ஏழை எளிய மக்களின் கனனை நனவாக்கி, மக்களுக்காக மட்டுமே திட்டங்கள், மக்களுக்காகவே நான் என்பதை, முதல்வர் ஜெயலலிதா நிரூபித்து உள்ளார். இது, 2016 சட்டமன்ற தேர்தலில், அவருக்கு பெரும் செல்வாக்கை தேடித்தரும்.

மேட்டுப்பாளையம், எம்.நந்தகுமார்
நான் ஒரு மாற்றுத்திறனாளி. என்னைப் போன்றவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை நடைமு றைப்ப டுத்தி வருகிறது. இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ள முழு உடல் பரிசோதனை திட்டம் எங்களைப் போன்ற, மாற்றுத்திறனாளிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். தனியார் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை என்பது எங்களைப் போன்றவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த நிலையில், தற்போது அரசாங்கமே இது போன்ற சிறப்பு திட்டத்தை துவக்கி உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

செந்தாமரை முருகன் – நல்லூர்
முதல்வர் ஜெயலலிதாவின், அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை, அம்மா ஆரோக்கிய திட்டம், அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம் அனைத்தும் பெண்களின் நலன் சார்ந்த திட்டங்கள் ஆகும். இத்திட்டங்கள் அனைத்தும், பெண்கள் நலனில் முதல்வர் ஜெயலலிதாவின் அக்கறையை எடுத்துக் காட்டுகிறது. அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டத்தில் 11 வகையான மூலிகை மருந்துகள் கொடுக்கப்படும் என தெரிவித்து உள்ளார். இதுவரை, எந்த அரசாங்கமும், இவ்வளவு ஆழமாக பெண்களின் நலனை சிந்தித்தது இல்லை. ஏழை எளியோருக்கான திட்டங்களை தரும் முதல்வருக்கு பெண்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வால்பாறை சித்திரபாண்டியன்– டாக்சி டிரைவர்
வால்பாறை போன்ற மலைப் பகுதியில் உள்ள பாமரமக்கள் மற்றம் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வரும், ஏழை எளிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, தங்களுடைய உடலை முழு பரிசோதனை செய்வது எட்டாக்கனியாக இருந்து வந்தது. தற்போது, முதல்வரின் அறிவிப்புகள், இந்த பிரச்னையை தவிடுபொடியாக்கி உள்ளது. எல்லோரும் உடல் நலத்துடன் வாழ, தாய் உள்ளத்தோடு அறித்து இருப்பது, தமிழக வரலாற்றில் மகத்தான திட்டம் ஆகும்.

சவரன் காடு எஸ்டேட், ஏ.எஸ்.வில்லியம்
முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ள திட்டம், நாடு முழுவதும் செயல்படு த்தக்கூடிய திட்டமாக உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் முழுஉடல் பரிசோதனை செய்ய முடியாத சூழ்நிலையில், இத்தகைய அறிவிப்பு, ஏழை எளிய மக்களுக்கான பொக்கிஷம் ஆகும்.

ராஜமாணி–கொழிஞ்சாநல்லூர்
எங்கள் பகுதி, புஞ்சை புளியம்பட்டி அருகில் உள்ள கொழிஞ்சாநல்லூர் ஆகும். ஏராளமான விவசாய கூலி தொழிலாளர் வாழும் பகுதியாகும். ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு சிகிச்சைகள், ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறிவிக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ளது, எங்களை போன்ற கூலிதொழிலாளி பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாகும். 11 வகையான மூலிகை மருந்து, கர்பிணி பெண்களுக்கு கொடுக்கும் திட்டம் சிறப்பு வாய்ந்தது. இது, அனைத்து தரப்பு பெண்களுக்குமான திட்டம். இதன் மூலம், பாரம்பரிய சித்த வைத்தியத்துக்கு முக்கியத்தும் அளிக்கப்பட்டு உள்ளது. இதை அனைத்துப் கர்பிணி பெண்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சரண்யா–கொழிஞ்சாநல்லூர்
தற்போது, நான் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறேன். முதல்வரின் சிறப்பு திட்டங்கள் பற்றி கேள்விப்பட்டேன். அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம், சித்த மருத்துவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது. இத்திட்டம், படித்த, படிக்காத என அனைத்து தரப்பு பெண்களுக்குமானது. முதல்வர் ஜெயலலிதாவின் இந்த திட்டத்தை மனதார வரவேற்கிறேன்.

அரூர், முத்துகுமார்
மலைக்கால ங்களில் பல வித மான நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. நமது உடலில் ஏற்படும் பிரச்சனைகள் எதற்காக என்ப தை கண்டறிய முடியாமல் தவிக்கின்றோம். தமிழக மக்களின் உடல் ஆரோக்கியம் என்பது, அம்மாவின் கனவுத்திட்டம். இன்று நனவாகி உள்ளது. இனி ஆரோக்கியமான தமிழகத்தை காணலாம்.

திருப்பூர்–  நடராஜன்
தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவ த்துறையை மேம்படுத்தும் வகையில், முழு உடல் பரிசோதனை திட்டத்தை  அறிவித்துள்ளார். இவை என்னை போன்ற தொழிலாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.  முன்பு எல்லாம் உயர் மருத்துவ வசதி பெற வேண்டும் என்றால், கோவை அல்லது  சென்னை போன்ற  நகரங்களுக்கு செல்ல வேண்டும். ஆனால், முதல்வர் ஜெயலலிதாவின்  பொற்கால ஆட்சியில், ஒவ்வொரு மாவட்ட தலைநகர்களில் தனியர் மருத்க்துவமனைகளுக்கு  நிகராக, அரசு மருத்துவமனையில் மருத்துவ வசதி பெற செய்துள்ளார்
செல்வி,  திருப்பூர் :-
தமிழக முதல்வர் ஜெயலலிதா, முதலமை ச்சராக எப்போது  எல்லாம் இருகிறாரோ, அப்போ தெல்லாம் தமிழ்நாட்டு தாய்மார்களுக்கு  பல்வேறு திட்டங்களை குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு சலுகைகளை அறிவித்து  செயல்படுத்தி வருகிறார்.  தற்போது, அவர் அறிவித்துள்ள அம்மா மகப்பேறு  சஞ்சீவி திட்டம், கர்பமான பெண்களுக்கு மட்டும் அல்ல பிறக்கும் குழந்தைகளின்  ஆரோக்கியத்திற்கும் சிறந்த திட்டமாகும். இதுபோன்ற நல்ல பல திட்டங்களை தொடர்ந்து வழங்க, அவருக்கு என்றேன்றும் ஆதரவை அளிப்போம்.
அவிநாசி–திலகா
நான் தையல் தொழிலாளி யாக இருந்து வருகிறேன். அவிநாசி பகுதி யில் ஏராளமான பெண்கள் தையல் தொழிலாளியாக உள்ளனர். வருமானம் பற்றாக்குறை உள்ள எங்களைப்போன்ற பெண்களுக்கு இந்தி திட்டம் வரப்பிரசாதம் ஆகும்.

தஞ்சை பூ கடை சி.மீனா
தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் பூ கடை வைத்துள்ளார், இவர் தஞ்சை கண்ணகி நகரில் வசித்து வருகிறார். இவர் கூறும்போது, முழு உடல் பரிசோதனை திட்டத்தில், பல்வேறு வகையான புதிய பிரிவுகள்  சேர்க்கப்பட்டு உள்ளது. தனியார் மருத்துவமனையில் மட்டுமே செயல்படுத்தி வந்த  சிகிச்சை, தற்போது அரசு மருத்துவமனையிலும் கிடைக்கும் என்ற செய்தி, எங்களை  போன்ற சிறுவியாபாரிகளுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது.

பழ வியாபாரி வள்ளியம்மாள்
கே.வள்ளிய ம்மாள், தஞ்சை வச்தாசாவடியை சேர்ந்த  இவர்  பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவர் கூறும்போது, முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கும் ஒவ்வொரு திட்டமும், பெண்களின் நேரடி  பயன்பாட்டுக்கு உகந்ததாக இருந்து வருகிறது. தற்போது, பல்வேறு விதமான  நோய்கள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான சிகிச்சை முறைகள், ஏழை எளிய  மக்களின் கனவிலும் நினைத்து பார்க்க முடியாது. ஏழை எளிய மக்களின் கனனை  நனவாக்கி, மக்களுக்காக மட்டுமே திட்டங்கள், மக்களுக்காகவே நான் என்பதை,  முதல்வர் ஜெயலலிதா நிரூபித்து உள்ளார். அவருக்கு கோடானுகோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

பழக்கடை ஆர்.கமலா
ஆர்.கமலா, இவர் தஞ்சையை அடுத்த மானோஜி பட்டியில் வசித்து வரும் இவர், தஞ்சையில் பழக்கடை வைத்துள்ளா ர். இவர் கூறும்போது,  அம்மா ஆரோக்கிய திட்டம், அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம் அனைத்தும்  பெண்களின் நலன் சார்ந்த திட்டங்கள் ஆகும். இத்திட்டங்கள் அனைத்தும்,  பெண்கள் நலனில் முதல்வர் ஜெயலலிதாவின் அக்கறையை எடுத்துக் காட்டுகிறது.  ஏழை எளியோருக்கான திட்டங்களை  தரும் முதல்வருக்கு பெண்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

டீ மாஸ்டர் முத்தையா
கே. முத்தையா தஞ்சை பர்மா காலனியை சேர்ந்த இவர், தஞ்சையில் டீ மாஸ்டராக உள்ளார். ஏழை எளிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, தங்களுடைய உடலை முழு பரிசோதனை செய்வது  எட்டாக்கனியாக இருந்து வந்தது. தற்போது, முதல்வரின் அறிவிப்புகள், இந்த  பிரச்சினையை தவிடு பொடியாக்கி உள்ளது. எல்லோரும் உடல் நலத்துடன் வாழ, தாய்  உள்ளத்தோடு அறித்து இருப்பது, தமிழக வரலாற்றில் மகத்தான திட்டம் ஆகும். முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

புதுக்கோட்டை சாலை விபத்து தடுப்பு, மீட்பு  பொதுநலச்சங்கத் தலைவர் மோகன்ராஜ்
புதுக்கோ ட்டை சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொது நலச்சங்கத் தலைவர்  மாருதி.க .மோகன்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:–

மிகவும்  பின்தங்கிய மாவட்டமான புதுக்கோட்டைக்கு அரசு மருத்துவ கல்லூரி  அமைக்கப்படும் என அறிவித்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சாலை விபத்து  தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச்சங்கத்தின் சார்பிலும், பொதுமக்கள்  சார்பிலும் கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவ்வாறு அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கே.பிரேம்குமார்
ஏழை   மக்களின் நலன் மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஆட்சி செய்யும் முதலமைச்சர்  ஜெயலலிதா  ஏழைத்தா ய்மார்களுக்காக அறிவித்த மகப்பேறு திட்டங்கள் என்னை போன்ற  ஏழை  எளியவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த பூமி உள்ளவரை  ஜெயலலிதாவின்  புகழ் நிலைத்திருக்கும்.

கட்டிடத்தொழிலாளி மாரியம்மாள்
கட்டிடத்தொழிலாளி மாரியம்மாள்  கூறுகையில்  எங்களை போன்ற கூலித்தொழிலாளிகள் நோயுற்றால் பெரும்தொகை செலவு  செய்து உயிரை  காப்பாற்றும் வசதி கிடையாது. ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா  பெண்களுக்காக  குறிப்பாக தாய்மார்களுக்காக இலவசமாக அரசு மருத்துவமனைகளில்  சிகிச்சை அளித்து  லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்களை வாழவைப்பதற்காக,  கொண்டு வந்திருக்கும் இத்திட்டங்களால் வாழும் தெய்வமாக ஜெயலலிதா காட்சி  தருகிறார்.

மரியசெல்வம்,
மரியசெல்வம், (70), என்.பஞ்சம்பட்டி ஊராட்சி, ஆத்தூர் ஒன்றியம், திண்டுக்கல் மாவட்டம் :
நேற்று  சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா ஏழைகளுக்கு உடம்பு முழுவதும் பரிசோதனை  செய்வதற்கு ஏதோ திட்டம் அறிவித்ததாக சொன்னார்கள். காலையில் பேப்பர்  பார்த்துவிட்டு வந்தவர்கள் சொன்னப்புறம்தான் எங்களுக்கு (ஏழைகளுக்கு) அம்மா  எவ்வளவு நல்ல திட்டத்தை அறிவிச்சிருக்காங்கன்னு தெரியவந்துச்சி.  முதல்வரம்மா மகராசி என்றும் நல்லா இருக்கனும்.

எஸ்.சுப்பையா
எஸ்.சுப்பையா,  (44), கம்மங்கூழ் வியாபாரம், புதமரத்துபட்டி, பள்ளபட்டி ஊராட்சி,  திண்டுக்கல் ஒன்றியம், திண்டுககல் மாவட்டம்: சட்டசபையில அம்மா அறிவித்த  முழு உடல் ஆரோக்கியத் திட்டம் எங்களைப் போல் உள்ள கூலித் தொழிலாளர்களுக்கு  பயனுள்ள திட்டமாகும். தினசரி ரூ.300 சம்பாதித்தாலும், சிகிச்சைக்காக  தனியார் ஆஸ்பத்திரிக்கு போனா 5 ஆயிரம் 10 ஆயிரம் செலவாகும். ஆனால் அம்மா  அறிவித்த இந்த திட்டம் மூலம் ஒருபைசா செலவில்லாமல் நாங்கள் அரசு  மருத்துவமனையில சிகிச்சை பெறலாம். முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எனது நன்றியை  தெரிவித்துக் கொள்கிறேன்.

தனராஜ்
தனராஜ்,(48), பழைய பாத்திரம்,  பிளாஸ்டிக் வியாபாரி, ஏசுபாளையம், முன்னிலைக்கோட்டை ஊராட்சி, ஆத்தூர்  ஒன்றியம், திண்டுக்கல் மாவட்டம் : அம்மா அறிவித்த அம்மா ஆரோக்கி திட்டம்  என்னைப்போல சிறு வியாபாரிகளுக்கு வரப்பிரசாதமான திட்டம். காலையில இருந்து  சாயந்திரம் வரைக்கும் கடும் வெயிலிலதான் நாங்கள் ஊர் ஊரா சுற்றி வியாபாரம்  செய்கிறோம். அம்மா அறிவித்த இந்த திட்டம் மூலம் எங்களுக்கு இலவசமா மருத்துவ  சிகிச்சை கிடைக்குது. நான் வேளாங்கன்னி மாதா கோவிலுக்கு மாலை  போட்டிருக்கேன். இந்த வட்டம் கோவிலுக்கு போய் அம்மா நீடூழி வாழ மாதாவிடம்  பிராத்தனை செய்வேன் என்றார். வி.செந்தில்குமார்
வி.செந்தில்குமார், (44),  டார்வின் மகளிர் தையலகம், கிழக்குரத வீதி, திண்டுக்கல். : முதலமைச்சர்  ஜெயலலிதா எண்ணற்ற நலத்திட்டங்களை தமிழக மக்களுக்காக செயல்படுத்தி  வருகிறார். நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம் என்பது போல இப்போது அம்மா முழு  உடல் பரிசோதனை திட்டம், அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டம்  அறிவிச்சிருக்காங்க. இந்த திட்டம் ஏழை மக்களுக்கு நூறு சதவீதம்  பயன்பெறக்கூடிய திட்டமாகும் என்றார். காரணம் எங்கள் தையலகத்தில் வேலை  பார்க்கும் 20க்கும் மேற்பட்ட பெண்கள் ஒவ்வொருத்தரும் ஒருசில உடல்  உபாதைகளைக் கூறுவார்கள். இனி அவர்கள் இந்த திட்டம் மூலம் எளிதாக இலவசமாக  சிகிச்சை பெறலாம் என்றார்.

பாலமுருகன்–ஆட்டோ டிரைவர்,
முதலமைச்சர் ஜெயலலிதா  அறிவித்துள்ள மருத்துவ திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு மிகவும்  முக்கியமான தேவையான திட்டங்களாகும். தனியார் மருத்துமனைகளில் உடல் பரிசோதனை  என்று பெயரளவில் செய்து விட்டு அதிக பணம் வசூல் செய்கின்றனர். மிக  சிறப்பாக செயல்படும் சிவகங்கை மருத்துவக்கல்லூரிக்கு பேட்டரி கார்கள்,  பல்வேறு மக்கள் பயன்பெறும் திட்டங்களை வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவின்  சாதனைகள் அனைத்தும் மேலும் தொடர ஆட்டோ தொழிலாளர்கள் சார்பாக  வாழ்த்துகிறோம்.

சூர்யா–குடும்ப தலைவி,
மக்கள்  நலனுக்காக மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை 4ஆண்டுகளாக வாரி  வழங்கிய திட்டங்களில், தமிழக முதல்வரின் தாலிக்கு தங்கம் பிரசவத்தின் போது  அனைத்து சலுகைகள் நான் பெற்றுள்ளேன். தற்போது முதலமைச்சர் ஜெயலலிதா  அறிவித்துள்ள அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம் அம்மா ஆரோக்கியத்  திட்டம், அம்மா மகப்பேறு சஞ்சீவினிதிட்டம், சிசு பராமரிப்பு மையம்  பிரசவித்த தாய்மார்கள், குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து செல்ல வாகன வசதி  போன்ற திட்டங்கள் மிகவும் கஷ்டப்படும் நடுத்தர மக்கள் வாழ்வில் மிக்க  மகிழ்ச்சியை தந்த ஏழை மக்களின் தெய்வமாக விளங்கும் தமிழகத்தின்  வேலுநாச்சியாரின் மறு உருவம், வீரமங்கை முதலமைச்சர் ஜெயலலிதாவை மகளிர்  சார்பாக மேலும் ஆட்சி தொடர் வாழ்த்துகிறோம்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்