முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருமான வரி கணக்கு தாக்கல்: நுங்கம்பாக்கத்தில் சிறப்பு கவுன்டர்கள்

புதன்கிழமை, 26 ஆகஸ்ட் 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை, 2014-15-ஆம் நிதி ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை சம்பளதாரர்கள், ஓய்வூதியதாரர்கள் தாக்கல் செய்ய சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரி தலைமை அலுவலகத்தில் இன்று  (ஆகஸ்ட் 27)  முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு சிறப்பு கவுன்ட்டர்கள் செயல்பட உள்ளன.மூத்த குடிமக்களுக்காக பிரத்யேக கவுன்ட்டர்கள் அமைக்கப்படும். இந்தச் சிறப்புக் கவுன்ட்டர்கள் வருமான வரிக் கணக்கு தாக்கலுக்கான கடைசி நாளான ஆகஸ்ட் 31-ம் தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்படும் என்று வருமான வரித் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக வருமான வரித் துறை கூடுதல் ஆணையர் (நிர்வாகம்) எம்.மதிவாணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

2014-15 நிதியாண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்குக் கீழ் உள்ளோர், வருமான வரி பிடித்தத் தொகையைத் திரும்பக் கோராதோர் மட்டுமே இந்தச் சிறப்புக் கவுன்ட்டர்களில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியும்.சிறப்புக் கவுன்ட்டர்கள் சனிக்கிழமை (ஆகஸ்ட் 29), ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30) ஆகிய நாள்களிலும் செயல்படும். தாம்பரம் பகுதிக்குள்பட்ட வருமான வரி செலுத்துவோர், தாம்பரம் வருமான வரி அலுவலகத்தில்தான் வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.80 வயதுக்குக் கீழே உள்ளோர், கீழ்க்கண்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் கட்டாயம் மின்னணு முறையில் மட்டுமே வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

1. ஆண்டு வருமானம் 5 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளோர்.

2. வருமான வரிப் பிடித்தத் தொகை யைத் திரும்பப் பெறக் கோருவோர்.

3. ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோர் அல்லது தொழில் மூலம் வருமானம் ஈட்டுவோர்.வருமான வரிக் கணக்கை அதற்குரிய படிவத்தில் தாக்கல் செய்வோர் நிரந்தரக் கணக்கு எண் (பான்), வங்கிக் கணக்கு எண், வங்கியின் ஐஎப்எஸ்சி குறியீடு உள்ளிட்டவற்றைத் தவறாமல் படிவத்தில் குறிப்பிட வேண்டும். வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வோர் மின்னணு முறையிலோ அல்லது படிவத்தைப் பூர்த்தி செய்தோ கணக்கைத் தாக்கல் செய்ய, சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரி தலைமை அலுவலகத்தில் உதவியாளர்கள் (Tax Preparers) வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியை கடைசி நாளான வரும் 31-ம் தேதி வரை வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோர் பயன்படுத்திக் கொள்ளலாம். வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோர், தங்களது வருமான வரி அலுவலக எல்லையை “www.tnincometax.gov.in’ என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்கள் அறிய “044-28338314′ என்ற தொலைபேசி எண்ணில் மக்கள் தொடர்பு அதிகாரியைத் தொடர்பு கொள்ளலாம் என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago