முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் கொடுத்த புகாரில் முன் ஜாமீன்: எழும்பூர் கோர்ட்டில் இளங்கோவன் ஆஜர்

புதன்கிழமை, 26 ஆகஸ்ட் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் மற்றும் காங்கிரஸ் அறக்கட்டளையின் மேலாளர் நாராயணன் ஆகியோர் மீது வளர்மதி என்ற பெண் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன்பு ஒரு புகார் அளித்தார்.

அதில் அறக்கட்டளை முறைகேடு தொடர்பாக புகார் தெரிவித்த என்னை, இளங்கோவன், நாராயணன் ஆகியோர் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக இளங்கோவன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் என 7 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து இளங்கோவன் சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் மனுதாக்கல் செய்தார். இதனை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.

2 நாட்களுக்கு பின்னர் அவரது மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட ஐகோர்ட்டு இளங்கோவனுக்கும், நாராயணனுக்கும் நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கியது. மதுரையில் தங்கி இருந்து இருவரும் தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இளங்கோவன் சென்னை மூர்மார்க்கெட் அல்லிகுளம் வளாகத்தில் உள்ள எழும்பூர் 13–வது கோர்ட்டில் இன்று ஆஜர் ஆனார். அவருடன் நாராயணனும் ஆஜராகி இருந்தார். ரூ.10 ஆயிரத்துக்கான பிணை பத்திரங்கள் கோர்ட்டில் வழங்கப்பட்டன. ரேஷன் கார்டு, அடையாள அட்டை போன்றவற்றையும் இருவரும் கோர்ட்டில் காட்டினார்கள்.

இதுபற்றி இளங்கோவன் கூறும்போது, "ஐகோர்ட்டு அளித்த முன்ஜாமீனை தொடர்ந்து நேற்று கோர்ட்டில் ஆஜராகி இருக்கும் நான் இன்று முதல் கோர்ட்டு உத்தரவின் பேரில் மதுரையில் தங்கியிருந்து அங்குள்ள போலீஸ் நிலையத்தில் கையெழுத்திடுவேன்" என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்