முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் இந்து கோயிலை சீரமைக்க நிபுணரை நியமிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு

புதன்கிழமை, 26 ஆகஸ்ட் 2015      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் - பாகிஸ்தானின் கைபர் மாகாணத்தில் இடிக்கப்பட்ட இந்து கோயில் மீண்டும் கட்டமைக்க புதிதாக பிரபல கட்டிடக் கலை நிபுணரை நியமிக்க அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கைபர் பக்துன்கவா மாகாணம், தேரி கிராமத்தில், ஸ்ரீபரம்ஹன்ஸ் ஜி மகராஜ் என்ற துறவி 1919-ம் ஆண்டு இறந்தார். இவர் இறந்த இடத்தில் கோயில் கட்டப்பட்டது. இதில் பாகிஸ்தான் இந்துக்கள் வழிபாடு செய்து வந்தனர். இந்நிலையில் 1997-ல் முஸ்லிம் பழமைவாதிகளால் இந்தக் கோயில் இடிக்கப்பட்டது. இந்த இடத்தை ஆக்கிரமித்த உள்ளூர் இஸ்லாமிய மதத் தலைவர், பின்னர் அந்த இடத்தை காலி செய்ய மறுத்துவிட்டார். 

இந்நிலையில் பாகிஸ்தானில் இந்துக் கோயில்களில் புனிதத் தன்மையை கெடுக்கும் வகையில் விஷமச் செயல்கள் அடிக்கடி நடப்பது தொடர்பாக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.  அப்போது தேரி கிராமத்தில் இந்து கோயில் இடிக்கப்பட்டதையும் நீதிமன்றத்தின் கவனதுக்கு கொண்டு செல்லப்பட்டது.

பாகிஸ்தான் தலைமை நீதிபதி நாசிர் உல் முல்க் தலைமையிலான 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தேரி கிராமத்தில் இடிக்கப்பட்ட கோயிலை மீண்டும் கட்டித்தந்து அதை பாதுகாக்க வேண்டும் என உத்தரவிட்டது.  இந்த வழக்கு மீதான மறுவிசாரணையில், குழு அமைத்து இந்து கோயிலை அதே கலை நுணுக்கத்துடன் கட்டமைக்க பிரபல கட்டிடக் கலை நிபுணர் ஒருவரை தேர்வு செய்து நியமிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்