முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் முறையாக இரும்பு தாது சுரங்கங்களை ஏலம் விட மத்திய அரசு திட்டம்

வியாழக்கிழமை, 27 ஆகஸ்ட் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - இந்த ஆண்டு 20 முக்கியமான இரும்புத் தாது சுரங்கங்களை ஏலம் விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.  இதுபோல இரும்புத் தாது சுரங்கங்களை அரசு ஏலம் விட்டது கிடையாது. முதல் முறையாக நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விட்டதைப் போல இரும்புத் தாது சுரங்கத்தையும் ஏலம் விட அரசு திட்டமிட்டுள்ளது.  கனிம வள சுரங்கங்களில் நடை பெறும் ஊழலை ஒழிப்பதற்காக இத்தகைய நடவடிக்கையை அரசு எடுக்க உள்ளதாகத்தெரிகிறது. முறையற்ற முறையில் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்வதாக புகார் எழுந்தவாறு உள்ளது. மேலும் அரசுக்கு உரிய வருமானம் கிடைக்காமல் முறையற்ற வகையில் தனியாரே கனிமவளங்களை சூறையாடும் போக்கு நீடிக்கிறது.

இதைப் படிப்படியாக மாற்றும் நோக்கில் இரும்புத் தாது சுரங்கங்களை ஏலம் விட அரசு முடிவு செய்துள்ளது.  இரும்புத் தாது சுரங்கங்களை ஏலம் விடுவதால் உடனடியாக உற்பத்தி அதிகரித்து விடாது. இருப்பினும் 2025-ம் ஆண்டில் 30 கோடி டன் இரும்பு உற்பத்தி இலக்கை எட்டுவதற்கும், இரும்புத் தாதுவுக் காக பெருமளவு வெளிநாடுகளை நம்பியிருப்பதைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை உதவும் என அரசு கருதுகிறது.  பொதுவாக பெரும்பாலான மாநிலங்கள் தாது உற்பத்தி நடவடிக்கையை அக்டோபர், நவம்பர் மாதங்களில் தொடங்கும். எனவே அந்த சமயத்தில் ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுரங்கத்துறைச் செயலர் பல்வீந்தர் குமார் தெரிவித்துள்ளார்.  முதல் கட்டமாக 80 சுரங்கங்கள் ஏலம் விட முடிவு செய்யப் பட்டுள்ளது.

இதில் சுண்ணாம்புக் கல், தங்கம் மற்றும் 20 முக்கியமான இரும்புத்தாது சுரங்கங்கள் அடங்கும் என்று அவர் கூறினார்.  உள்நாட்டு உற்பத்தி போதுமான அளவுக்கு இல்லாததால் கடந்த ஆண்டு 1.5 கோடி டன் அளவுக்கு இரும்புத் தாது இறக்குமதி செய்யப் பட்டது. சுரங்கப் பணி நடைபெற குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாகிறது. சுற்றுச் சூழல், வனத்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் ஒப்புதலைப் பெற வேண்டியுள்ளது.  போஸ்கோ வெளியேறியது பிரதமரின் கனவுத் திட்டங்களில் ஒன்றான மேக் இன் இந்தியா திட்டத்தை எட்டுவதில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் தனி ஒரு நிறுவனத்துக்காக விதிகளை மாற்ற முடியாது என்று குமார் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago