முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.சாட்-6 செயற்கை கோளுடன் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

வியாழக்கிழமை, 27 ஆகஸ்ட் 2015      இந்தியா
Image Unavailable

பெங்களுரு, ஜிசாட்-6 செயற்கைக் கோளுடன் ஜி.எஸ்.எல்.வி ராக் கெட் நேற்று மாலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட்டை விண்ணில்ஏவுவதற்காக 29மணி நேர கவுன்ட் டவுன் புதன் கிழமையன்று துவங்கியது. ஜி.எஸ்.எல் வி. ராக் கெட் ஜிசாட்-6செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தியதும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

இந்த  ராக் கெட் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது ஆகும் . இந்த ராக் கெட் சென்னை அருகே உள்ள ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நேற்று மாலை 4,52மணிக்கு விண்ணில் வெற்றி கரமாக ஏவப்பட்டது.இந்த வெற்றியை இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.

இந்த ராக் கெட் 2ஆயிரத்து 117கிலோ எடை கொண்ட ஜிசாட்-6செயற்கைக் கோளை விண்ணில்  வெற்றி கரமாக கொண்டு சென்றது. அந்த ராக் கெட் தீப்பிழம்பை கக்கியவாறு விண்ணில் நிர்ணயிக்கப்பட்ட இலக் கை நோக்கி சென்ற போது அதனை பார்த்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கொண்டாடினர்.

ஜி.எஸ்.,எல்.வி ராக் கெட் மத்திய ரக எடை கொண்ட ராக் கெட் ஆகும். இந்த ராக் கெட் 2டன் எடை கொண்ட செயற்கைக் கோள்களை விண்ணில் கொண்டு செல்லும் திறன் படைத்தது.

பூமியில் இருந்து 36ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள விண்வெளி பாதையில் செயற்கைக் கோளை நிலை நிறுத்தக்கூடியது ஆகும்.
இதற்கு முன்னர் ஜி.எஸ்.எல்.வி ராக் கெட் கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் விண்ணில் ஏவப்பட்டது.

இந்த ராக் கெட் பயண விவரம் குறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவரும் விண்வெளி அறிவியல் துறையின்  செயலாளருமான ஏ.எஸ் கிரண் குமார் கூறுகையில் தற்போது ஜி.எஸ் எல்வி ராக் கெட் 9வது முறையாக விண்ணில் ஏவப்பட்டது. ஜி.எஸ்.எல்.வி ராக் கெட் திட்டம் 20ஆண்டு திட்டமாகும். இந்த ராக் கெட்டுடன் அனுப்பபட்ட ஜிசாட் -6செயற்கைக் கோள் சில புதிய தொழில் நுட்பங்களை கொண்டிருக்கிறது.இதில் 6மீட்டர் விட்டம் கொண்ட ஆண்டெனா பொருத்தப்பட்டிருக்கிறது. இது ஆண்டெனா மடக்கக்கூடிய தன்மை கொண்டது என்றார்.

நேற்று ஏவப்பட்ட ஜி.சாட் -6செயற்கைக் கோள் தகவல் தொடர்பு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றை துல்லியமாக கண்டறிந்து தெரிவிக்கக்கூடியதாகும். இந்த செயற்கைக் கோள் விண்ணில் 9ஆண்டுகள் வெற்றிகரமாக தனது பணியை மேற்கொள்ளும்.இந்த செயற்கைக்கோள் தேசிய பேரிடர் மீட்பு பணிக்கும் பாதுகாப்பு துறைக்கும் உதவக்கூடியதாகும்.

ஜி.எஸ்.எல்.வி ராக் கெட் விண்வெளியில் வெற்றி கரமாக ஏவப்பட்ட செய்தி இந்தியர்கள் அனைவருக்கும் பூரிப்பை தந்தது. இந்த வெற்றி குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இஸ்ரோ நிறுவனத்தின் மற்றொரு ஏவுகலம் பி.எஸ்.எல்.வி ராக்  கெட் ஆகும். கடந்த 22ஆண்டுகளில் 30முறை இந்த ராக் கெட் விண்ணில் வெற்றி கரமாக ஏவப்பட்டிருக்கிறது.  இந்த ராக் கெட் இந்தியாவின் விண்கலங்களை நிலாவுக்கும் செவ்வாய்கிரகத்திற்கும் வெற்றி கரமாக கொண்டு சென்றுள்ளது. இந்த ராக் கெட் வெளி நாடுகளைச் சேர்ந்த 45சிறிய செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக கொண்டு சென்று இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்