முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓணம் பண்டிகை: உலகம் முழுவதும் உற்சாக கொண்டாட்டம்

வெள்ளிக்கிழமை, 28 ஆகஸ்ட் 2015      இந்தியா
Image Unavailable

சென்னை, கேரள மக்களின் வசந்தகால திருவிழாவான திருவோண பண்டிகை நேற்று கேரளா மற்றும் உலகம் முழுவதும் உள்ள மலையாள மக்களால் பாரம்பரிய உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

ஆண்டுக்கு ஒருமுறை ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் மக்களை சந்திக்க வரும் மாகாபலி மன்னனை வரவேற்கும் இத்திருவிழா மாநிலமெங்கும் ஜாதி, மத, இன வேறுபாடின்றி கொண்டாடப்பட்டது. அனைத்து மக்களும் இன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து புத்தாடைகள் அணிந்து கோவில்களுக்கு சென்று வழிபட்டனர். குருவாயூர் கோவிலில் குருவாயூரப்பனுக்கு வாழை குலைகள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று காலை 9.30 மணிக்கு பக்தர்களுக்கு ஓணசத்யா விருந்து அளிக்கப்பட்டது.
முன்னதாக அய்யப்பனுக்கு விருந்து படைத்து தந்திரிகள் சிறப்பு பூஜை செய்தனர். அதன் பிறகு 22 வகை பதார்த்தங்களுடன் விருந்து நடந்தது. கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அனைவருக்கும் விருந்து அளிக்கப் பட்டது. இன்று இந்த விருந்து நடக்கிறது. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலிலும், ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இதுபோல பல்வேறு விஷ்ணு தலங்களிலும் மக்கள் கூட்டம் நிறைந்திருந்தது.

வழிபாடுகள் முடிந்த பின்பு அனைவரும் ஓணம் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். தொடர்ந்து ஓணம் சத்யா விருந்து தடபுடலாக நடந்தது. நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் விருந்து படைத்து மகிழ்ந்த பின்பு பெண்கள் ஓணம் ஊஞ்சலாடியும், ஆண்கள் எறிபந்து, களரி விளையாட்டுகளில் ஈடுபட்டும் மகிழ்ந்தனர். திருவனந்தபுரம், பத்தினம் திட்டா, கிழக்கே கோட்டை, ஆலப்புழா, பாலக்காடு, கொச்சி, எர்ணாகுளம் உள்ளிட்ட நகரங்களில்நேற்று மாலை இசை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. மாநில அரசு சார்பில் ஓணம் ஊர்வலம் நடக்க இருக்கிறது. இதையட்டி அனைத்து கட்டிடங்களும் மின்னொளியில் ஜொலிக்கிறது.

கேரளாவையட்டி உள்ள குமரி மாவட்டத்திலும் இன்று ஓணப்பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப் பட்டது. குமரியில் உள்ள தமிழர்களுக்கு அவர்கள் விருந்தளித்து மகிழ்ந்தனர். ஓணத்திற்காக இன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. இங்குள்ள மலையாளிகள் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இந்த கோவில்கள் அனைத்திலும் மலையாள ஐதீகப்படியே வழிபாடுகள் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னியாகுமரி பகவதி அம்மன் இன்று ஓணப்பட்டு உடுத்தி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இது போல் உலக மெங்கும் உள்ள மலையாள மக்களால் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடபட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago