முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை அரசு ஆஸ்பத்திரியில் முழு உடல் பரிசோதனைக்கு ரூ.1000 கட்டணம்: தனியாரைவிட 5 மடங்கு குறைவு

வெள்ளிக்கிழமை, 28 ஆகஸ்ட் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் குறைந்த கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை திட்டம் செயல்படுத்தப்படும்.பெண்களுக்கு தனியாக சிறப்பு உடல் பரிசோதனை திட்டமும் தொடங்கப்படும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.

மேலும் தமிழகத்தில் உள்ள 385 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இலவச உடல் பரிசோதனை திட்டமும் ஏழை–எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக அறிவித்துள்ளார். ‘அம்மா’ ஆரோக்கிய திட்டம், அம்மா மகப்பேறு சஞ்சீவினி திட்டம் போன்றவை அந்த அறிவிப்பில் இடம் பெற்றன.சென்னை அரசு ஆஸ்பத்திரியில் செயல்படுத்தப்படும் முழு உடல் பரிசோதனை திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு தேவையான கட்டிடத்தை புனரமைக்க ரூ.1.5 கோடி வழங்கப்பட்டுள்ளது.முழு உடல் பரிசோதனை செய்வதன் மூலம் நோய் குறியீட்டினை முன் கூட்டியே கண்டுபிடித்து அதற்கு தகுந்த சிகிச்சை மேற்கொண்டு ஆரோக்கியத்துடன் வாழ முடியும் என்ற உயர்ந்த நோக்கத்தில் முதல்–அமைச்சர் இந்த திட்டத்தை ஏழை–நடுத்தர மக்களுக்காக கொண்டு வந்துள்ளார்.தனியார் மருத்துவமனையில் இந்த பரிசோதனைகளை செய்ய ரூ.5000 முதல் ரூ.12 ஆயிரம் வரை செலவாகிறது. அவ்வளவு தொகை கொடுத்து சாதாரண மக்களால் உடல் பரிசோதனை செய்ய முடிவது இல்லை.

அதனால் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் இடையே வரவேற்பு கிடைத்துள்ளது.அரசு ஆஸ்பத்திரியில் முழு உடல் பரிசோதனை செய்ய தனியார் மருத்துவமனையை விட மிகக்குறைந்த கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.அப்போது தான் ஏழை மக்கள் இதன் மூலம் பயன் பெற முடியும் என்ற நல்லெண்ணத்தில் கட்டணம் தனியாரைவிட 5 மடங்கு குறைவாக நிர்ணயம் செய்யப்படுகிறது.ஒருவருக்கு முழு உடல் பரிசோதனை செய்ய ரூ.1000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறுகையில், முதல்–அமைச்சரின் இந்த சிறப்பு திட்டம் பாமர மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்க வேண்டும் என்பதற்காக குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.தனியார் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்ய ரூ.5000 முதல் ரூ.12 ஆயிரம் வரை செலவாகிறது. அதைவிட 5 மடங்கு குறைவாக ரூ.1000 கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.கிராமப்புறங்களில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த பரிசோதனை முற்றிலும் இலவசமாக செய்யப்படும் என்றார்.சென்னை அரசு ஆஸ்பத்திரியில் இன்னும் 2 மாதத்திற்குள் முழு உடல் பரிசோதனை திட்டம் தொடங்கப்படும் என்றும் அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது என்றும் டீன் விமலா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்