முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்ட நெரிசலை குறைக்க 9 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் ஏசி பெட்டிகள் இணைப்பு

வெள்ளிக்கிழமை, 28 ஆகஸ்ட் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, கூட்ட நெரிசலை குறைப்பதற்காக 9 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தற்காலிகமாக ஏ.சி.பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தெற்கு ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி லட்சுமணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–
1. சென்ட்ரல் – பெங்களூர் – சென்ட்ரல் இரட்டைமாடி எக்ஸ்பிரஸ் (எண்.22625) ரெயிலில் ஒரு ஏ.சி.சேர்கார் செப்டம்பர் 14–ந் தேதி முதல் டிசம்பர் 14–ந் தேதி வரை இணைக்கப்பட்டுள்ளது.

2. சென்ட்ரல் – விஜயவாடா – சென்ட்ரல் ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஒரு ஏ.சி.சேர்கார் பெட்டி செப்டம்பர் 21–ந் தேதி முதல் டிசம்பர் 21–ந் தேதி வரை இணைக்கப்படுகிறது.

3. சென்ட்ரல் – பிகானர் – சென்ட்ரல் அனுரத் வாராந்திர ரெயிலில் ஒரு ஏ.சி. இரண்டு அடுக்குபெட்டி நேற்று முதல் நவம்பர் 26–ந் தேதி வரை சேர்க்கப்படுகிறது.

4. மதுரை – சண்டிகார் – மதுரை வாரம் இருமுறை எக்ஸ்பிரசில் 2–ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி ஒன்று வருகிற 30–ந் தேதி முதல் நவம்பர் 29–ந் தேதி வரை இணைக்கப்படுகிறது.

5. கன்னியாகுமரி – ஹவுரா – கன்னியாகுமரி வாராந்திர எக்ஸ்பிரசில் 2–ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி ஒன்று செப்டர்பர் 9–ந் தேதி முதல் டிசம்பர் 5–ந் தேதி வரை சேர்க்கப்படுகிறது.

6. நாகர்கோவில் – மும்பை – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2–ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி ஒன்று வருகிற 31–ந் தேதி முதல் நவம்பர் 30–ந் தேதி வரை இணைக்கப்படுகிறது.

7. நாகர்கோவில் – மும்பை – நாகர்கோவில் வாரம் இருமுறை செல்லக்கூடிய எக்ஸ்பிரசில் 2–ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி ஒன்று வருகிற 30–ந் தேதி முதல் நவம்பர் 29–ந் தேதி வரை சேர்க்கப்படுகிறது.

8. எழும்பூர் – ஜோத்பூர் – எழும்பூர் வாராந்திர எக்ஸ்பிரசில் 2–ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி ஒன்று இணைக்கப்படுகிறது.

9. திருவனந்தபுரம் – மும்பை – திருவனந்தபுரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் 3 அடுக்கு ஏ.சி.பெட்டி ஒன்று நவம்பர் 7–ந் தேதியில் இருந்து 6.2.2016 வரை இணைக்கப்படுகிறத

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago