முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மணிமண்டபம் எழுப்பிய ஜெயலலிதாவின் செயல் பாராட்டுக்குரியது: வைகோ

வெள்ளிக்கிழமை, 28 ஆகஸ்ட் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, கயத்தாறில் தமிழக அரசு அமைத்திருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் மணி மண்டபத்தை நேற்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பார்வையிட்டார். பின்பு அங்கு வைக்கப்பட்டிருந்த குறிப்பேட்டில் கையெழுத்திட்டு, எழுதியதாவது:-

வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட அக்டோபர் 16-ந்தேதி ஆண்டுதோறும் இங்கு வந்து கட்டபொம்மனுக்கு புகழஞ்சலி செலுத்துகிறேன். வீரபாண்டிய கட்டபொம்மன் அடைக்கப்பட்டிருந்த இடத்தை இடித்து ஒரு மணி மண்டபம் அங்கு எழுப்பப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறேன்.தற்போது இந்த மணி மண்டபம் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. கட்டபொம்மன் சிலையும் கம்பீரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வேட்டை நாயை முயல் விரட்டும் காட்சியும், கட்டபொம்மன் பட்டாபிஷேகமும் சித்திரங்காளகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம் அழியாத புகழை தமிழர்களின் இதயத்தில் எழுதியது. கட்டபொம்மனாகவே காட்சி அளித்தார். அவரது சொந்தச் செலவில் இடம் வாங்கி கட்டபொம்மன் சிலை எழுப்பிக்கொடுத்தார். காமராசர் தலைமையில், நீலம் சஞ்சீவிரெட்டியை கொண்டு சிலையைத் திறக்கச்செய்தார்.இங்கு மணி மண்டபம் எழுப்பிய தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா செயல் பாராட்டுக்குரியதாகும். அதே போன்று கட்டபொம்மன் சிறை வைக்கப்பட்டு, தற்போது இடிந்து கிடக்கும் கட்டிடத்தை அகற்றி, அதே இடத்தில் ஒரு மண்டபம் அமைத்து, அதில் அந்த வரலாற்றுச் சம்பவத்தை கல்வெட்டில் பொறிக்க தமிழக அரசு முன்வரவேண்டுகிறேன்.

இவ்வாறு வைகோ அக்குறிப்பேட்டில் எழுதியிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்