முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அத்து மீறி நடத்தும் தாக்குதல் பாகிஸ்தானின் விரக்தி நிலையையே காட்டுகிறது: பா.ஜ.க

வெள்ளிக்கிழமை, 28 ஆகஸ்ட் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் பாகிஸ்தான் நடத்தும் தாக்குதல் அந்த நாட்டின் 50ஆண்டுகால விரக்தியையே காட்டுகிறது என்று பா.ஜக.செய்தித்தொடர்பாளர் ஒரு வர் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து அத்து மீறி தாக்குதல் நடத்துகிறார்கள். அவர்களது தாக்குதலில் எல்லை பகுதியில் உள்ள இந்திய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

 வியாழக்கிழமை இரவு முதல் நேற்று காலை வரை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்து மீறி நடத்தி துப்பாக்கிச்சூட்டில் 3 அப்பாவி மக்கள் பலியானார்கள். 17பேர் படுகாயம் அடைந்தனர். இதில் 4பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இதனிடையே இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பல்வேறு கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்புகிறது.

இதனிடையே பாஜக செய்தித்தொடர்பாளர் ஒருவர் நேற்று டெல்லியில் இதுகுறித்து கூறுகையில் பாகிஸ்தானின் அத்து மீறல்கள் துரதிர்ஷ்ட வசமானது.. அந்த நாட்டு ராணுவம் நடத்தி வரும் தாக்குதல் அந்த நாட்டின் 50ஆண்டுகால விரக்தி நிலையைதான் பிரதிபலிக்கிறது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்