முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த 7 ஆண்டுகளில் மின்உற்பத்தி இரு மடங்காக உயரும்: மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நம்பிக்கை

சனிக்கிழமை, 29 ஆகஸ்ட் 2015      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா - அடுத்த 7 ஆண்டுகளில் இந்தியா, தனது மின்உற்பத்தியை இரு மடங்காக உயர்த்தி கொள்ளும் என்று மத்திய நிலக்கரி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கோயல் தெரிவித்தாவது, நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகன்களும் வாரத்தின் அனைத்து நாள்களும் தடையின்றி மின்சாரம் பெறுவதற்கான நடவடிகைக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் டீசல் மூலம் மின்உற்பத்தி பெறும் முறையை அறவே ஒழிப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.

ஏனேனில் டீசல் மூலம் மின்உற்பத்திக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் நாம் செலவழிப்பதாகவும், இது நாட்டில் உள்ள மக்களால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மேற்கொள்ளப்பட்டு வருதாகவும், வருந்ததக்க செயல் என்றும் அவர் தெரிவித்தார். பெருகி வரும் மின்சார தேவைக்கு ஏற்ப மாற்று முறையான தெர்மல், வாயு, அணு சக்தி மற்றும் புதுபிக்கதக்க எரிசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க வேண்டிய சூழ்நிலையில் நாம் உள்ளோம்.

மேலும் இந்தியாவில் அடுத்த 7 ஆண்டுகளில் அல்லது அதற்குள்ளே மின்சார உற்பத்தியை இரண்டு மடங்காக, அதாவது  ஒரு டிரில்லியன் அளவிலிருந்து 2 டிரில்லியன் அளவுக்கு உயர்துவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று அவர் தெரிவித்தார். இது பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என்றும், மின்சார உற்பத்திக்கான செலவு கனிசமாக குறையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் மின்சார பறிமாற்றம் மற்றும் உற்பத்தி செலவை குறைக்கவும், மின்திருட்டை தடுக்கவும், தொழில்நுட்ப கோளாறுகள் மூலம் ஏற்படும் மின்உற்பத்தி பாதிப்பை குறைக்க கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்