முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேஸ்புக்கை ஒரே நாளில் 100 கோடி பேர் பயன்படுத்தி புதிய சாதனை

சனிக்கிழமை, 29 ஆகஸ்ட் 2015      உலகம்
Image Unavailable

லண்டன் - சமூக வலைத்தளமான பேஸ்புக்கை ஒரே நாளில் உலகம் முழுவதும் இருந்து 100 கோடி பயனாளிகள் பயன்படுத்தியுள்ளனர். இதன் மூலம் சமூக வலைத்தள வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளது பேஸ்புக் இணைய தளம். திங்கள்கிழமை அன்று நிகழ்ந்த இந்தச் சாதனை குறித்து அதன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்க் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது.,

முதன்முறையாக 100 கோடி பேர் ஒரே நாளில் பேஸ்புக்கைப் பயன்படுத்தியுள்ளார்கள். இதன் மூலம் முக்கிய மைல்கல்லை நாங்கள் கடந்து சாதனை படைத்துள்ளோம்.  மேலும் அவர்  கடந்த திங்கள்கிழமை ஏழு நபர்களில் ஒருவர் தங்கள் நண்பர்களுடனும் குடும்பத்தின ருடனும் தொடர்பு கொள்ள பேஸ்புக்கை பயன்படுத்தியிருக்கிறார்கள். அத்தனை பேருக்கும் இடையில் புரிதல் மலர வேண்டும்.

அதே போல நவீன உலகில் உள்ள ஏராளமான வாய்ப்புகளை எல்லோரும் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் எங்கள் நிறுவனம் இயங்குகிறது. எங்கள் சமூகத்தின் அங்க மாகச் செயல்பட்ட ஒவ்வொருவருக்கும், இத்தகைய சாதனை படைக்க உதவிய அனைவருக்கும் நன்றி. அடுத்து நாம் இணைந்து படைக்கப்போகும் சாதனையை எதிர்பார்த்து ஆவலாகக் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு சிறிய அறையில் இருந்தபோது மார்க் ஜூக்கர்பெர் 2004-ல் பேஸ்புக்கை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்