முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேளாங்கண்ணி விழாவையொட்டி சென்னை எழும்பூர்-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில்

சனிக்கிழமை, 29 ஆகஸ்ட் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:- சென்னை எழும்பூரில் இருந்து செப்டம்பர் 7-ந்தேதி இரவு 10.45 மணிக்கு வேளாங்கண்ணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வ.எண்:06071), அடுத்த நாள் காலை 6.30 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும். வேளாங்கண்ணி- சென்னை எழும்பூர் இடையே ‘சுவிதா’ சிறப்பு ரெயில்(00616) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் வேளாங்கண்ணியில் இருந்து செப்டம்பர் 8-ந்தேதி இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

வேளாங்கண்ணியில் இருந்து லோக்மான்யா திலக் டெர்மினஸ் செல்லும் ‘சுவிதா’ சிறப்பு ரெயில்(00613), 9-ந்தேதி நள்ளிரவு 12.15 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு அடுத்தநாள் மதியம் 12.15 மணிக்கு லோக்மான்யா திலக் டெர்மினஸை சென்றடையும். சென்னை சென்டிரலில் இருந்து செப்டம்பர் 4-ந்தேதி இரவு 10.30 மணிக்கு எர்ணாகுளத்துக்கு இயக்கப்படும் ‘சுவிதா’ சிறப்பு ரெயில்(00605), மறுநாள் காலை 11.15 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். இதேபோல், எர்ணாகுளத்தில் இருந்து செப்டம்பர் 6 மற்றும் 20-ந்தேதிகளில் இரவு 7 மணிக்கு சென்னை சென்டிரலுக்கு இயக்கப்படும் ‘சுவிதா’ சிறப்பு ரெயில்(00606), அடுத்தநாள் காலை 8.15 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.

திருவனந்தபுரத்தில் இருந்து செப்டம்பர் 17 மற்றும் 24-ந்தேதிகளில் இரவு 7 மணிக்கு சென்னை சென்டிரலுக்கு இயக்கப்படும் ‘சூப்பர் பாஸ்ட்’ சிறப்பு ரெயில்(06075), மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும். மறுமார்க்கமாக சென்னை சென்டிரலில் இருந்து செப்டம்பர் 17 மற்றும் 24-ந்தேதிகளில் பிற்பகல் 3.15 மணிக்கு திருவனந்தபுரத்திற்கு இயக்கப்படும் ‘சூப்பர் பாஸ்ட்’ சிறப்பு ரெயில்(06076), அடுத்த நாள் காலை 7.45 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும். இந்த ரெயில்களில் பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago