முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெங்காயம் விலையேற்றம் மேலும் ஒரு மாதம் நீடிக்கும்

சனிக்கிழமை, 29 ஆகஸ்ட் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - சென்னை கோயம்பேட்டிற்கு மகாராஷ்ட்ராவில் இருந்து தினமும் 70 லாரிகளில் பெரிய வெங்காயம் வருவது வழக்கம். ஆனால் தற்போது 50 லாரிகளில் மட்டுமே வெங்காயம் வருகிறது. அதுவும் ஆந்திராவில் இருந்து வரும் வெங்காயம் கை கொடுப்பதால் சென்னையில் மிகப்பெரிய அளவில் விலை உயர்வு ஏற்படவில்லை. சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கு தேவை அதிகளவு இருப்பதால் பெரிய வெங்காயம் சில்லரை விலையில் கிலோ ரூ.80 வரை விற்கப்படுகிறது.

வெங்காயத்தின் விளைச்சல் குறைவாக இருப்பதால் வரத்து குறைந்துள்ளது. மகாராஷ்ட்ராவில் மழை குறைந்ததால் வெங்காயம் விளைச்சல் கணிசமாக குறைந்து இருப்பதே இந்த விலையேற்றத்திற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. பெரிய வெங்காயம் விலை உயர்ந்ததால் சின்ன வெங்காயத்தை பலரும் வாங்கி செல்கின்றனர். சின்ன வெங்காயம் கிலோ ரூ.45க்கு விற்கப்படுகிறது. பெரிய வெங்காயத்தின் விலையேற்றம் தொடர்ந்து நீடிக்கும் என்று காய்கறி மொத்த வியாபாரிகள் சங்க ஆலோசகர் வி.ஆர். சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:– பெரிய வெங்காயம் விலை உயர்வு மேலும் ஒரு மாதம் வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது. விலையேற்றத்தால் வெங்காயம் வியாபாரம் மந்தமாக உள்ளது. மற்ற காய்கறிகள் விலை குறைவாக உள்ளது. வெங்காயம் விலை பிற வெளிமாநிலங்களை விட சென்னையில் குறைவாகும். ஆந்திரா வெங்காயம் வருவதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார். கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் மொத்த விலை வருமாறு:–

இஞ்சி (பழையது)– ரூ.90
இஞ்சி (புதியது)– ரூ.30
காலிபிளவர்– ரூ.25

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்