முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகாவில் பிரபல எழுத்தாளர் -முன்னாள் பல்கலை துணைவேந்தர் கல்பர்கி சுட்டுக் கொலை

ஞாயிற்றுக்கிழமை, 30 ஆகஸ்ட் 2015      இந்தியா
Image Unavailable

தார்வாட்: கர்நாடகாவில் மூத்த எழுத்தாளரும், ஹம்பி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான எம்.எம்.கல்பர்கி மர்மநபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.கர்நாடக மாநிலம் தார்வாட் நகரில் நேற்றுகாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் மூத்த எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான எம்.எம்.கல்பர்கி படுகாயம் அடைந்தார்.உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனபோதும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார்

சுட்டுக் கொல்லப்பட்ட கல்பர்கி ஹம்பி பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றியவர். கல்பர்கி வீட்டிற்கு ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு அளித்து வந்தனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தான், கல்பர்கி கேட்டுக் கொண்டதற்கிணங்க அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்துத்துவா அமைப்புகளுக்கு எதிராக...வலது சாரி இந்துத்தவா அமைப்புகளால் இவரது உயிருக்கு ஆபத்து இருந்து வந்தது. இந்துத்துவா அமைப்புகளுக்கு எதிராக தீவிரமாக பேசி, எழுதி வந்தவர் கல்பர்கி என்பது குறிப்பிடத்தக்கது.நேற்றுகாலை 9 மணியளவில் கல்பர்கியின் வீட்டுக்கு ஒரு மர்ம நபர் வந்துள்ளார். வீட்டுக் கதவைத் தட்டியுள்ளார். கதவை கல்பர்கியின் மனைவி திறந்துள்ளார். கல்பர்கி எங்கே என்று அவரிடம் அந்த நபர் கேட்டுள்ளார். இதையடுத்து கல்பர்கி வெளியே வந்தார். அப்போது அந்த நபர் மிக நெருக்கத்தில் வைத்து கல்பர்கியை சுட்டு விட்டார்.

அதன் பின்னர் அந்த நபர் அங்கிருந்து நகர்ந்து மோட்டார் சைக்கிளில் ஏறித் தப்பி விட்டார்.வழக்கு...கடந்த ஆண்டு ஜூன் மாதம் மறைந்த எழுத்தாளர் யு.ஆர். அனந்தமூர்த்தி மற்றும் கல்பர்கி ஆகியோர் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக கூறி ஒரு இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர் புகார் கூறியிருந்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
அனந்தமூர்த்தி கூறிய கருத்தை ஆதரித்து கல்பர்கி கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பஜ்ரங் தளம், வி.எச்.பி. மற்றும் ஸ்ரீராம் சேனே ஆகிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.

இதுதொடர்பாக பஜ்ரங் தளத்தினர் போராட்டம் நடத்தியபோது கல்பர்கி வீட்டையும் தாக்கினர். தற்போது நடந்துள்ள கொலைக்கும் இந்துத்துவா அமைப்புகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என உறுதியாக நம்பப்படுகிறது.கல்பர்கி கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார், குற்றவாளிகளைத் தீவிரமாக தேடி வருகின்றனர். முன்னாள் பாம்பே மாகாணத்தைச் சேர்ந்த யரகல் கிராமத்தில் பிறந்தவர் கல்பர்கி. தற்போது இந்த ஊர் கர்நாடக மாநிலத்தின் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்