முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடி அரசு விவசாயிகளுக்கு எதிரானது பீகாரில் சோனியா காந்தி ஆவேசப் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 30 ஆகஸ்ட் 2015      இந்தியா
Image Unavailable

பாட்னா: பிரதமர் மோடியும் அவரது அரசும் நாட்டிற்கு எதனையும் செய்யவில்லை . இந்த அரசு நாடகமாடிகொண்டிருக்கிறது. விவசாயிகளுக்கு எதிரானது மோடி அரசு என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டினார். பீகாரில் விரைவில் சட்ட மன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை யடுத்து சோனியா காந்தி பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லல்லுபிரசாத் ஆகியோர் ஒரே மேடையில் நேற்று பிரச்சாரம் செய்தனர்.

பாட்னாவில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசினார். அப்போது அவர் மோடி அரசை கடுமையாக தாக்கிப்பேசினார். அவர் பேசியதாவது, மோடி அரசு தனது ஆட்சிக்காலத்தில் 4ல் ஒருபகுதியை கழித்து விட்டது. ஆனாலும் அவர்கள் இந்த நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை. நாடகம் நன்றாக போடுகிறார்கள். பெண்களுக்கான ,குழந்தைகளுக்கான வளர்ச்சி திட்டங்களின் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பு தருவதாக பிரதமர் மோடி சொன்னார். ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற அவர் எ துவுமே செய்ய வில்லை. மோடி விவசாயிகளுக்கு எதிரான அரசு.பீகாரை அவமானப்படுத்துவதில் சிலருக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. அவர்கள் பீகாரின் மரபை அவர்கள் அவமானப்படுத்துகிறார்கள்.

ஏழைகளின் நிலங்களை பறித்து  பணக்காரர்களுக்கு கொடுக்கவே ஆசைப்படுகிறார்கள். ஆனால் நாங்கள் பீகாரையும் இந்த மக்களின் திறமையையும் எப்போதும் மதித்து வந்திருக்கிறோம்.பீகாரின் வளர்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் பங்கு அதிகம். இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்