முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் கட்ட பணி வெற்றி: ஜிசாட்-6 சுற்றுப்பாதை அதிகரிப்பு - இஸ்ரோ தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 30 ஆகஸ்ட் 2015      இந்தியா
Image Unavailable

ஜிசாட்-6 செயற்கைக் கோளின் முதல்கட்ட சுற்றுப்பாதை அதி கரிப்பு பணி வெற்றிகரமாக நடந் திருப்பதாக இஸ்ரோ தெரி வித்துள்ளது. தொலைத்தொடர்புக்கு உதவும் ஜிசாட்-6 செயற்கைக் கோள் ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி டி-6 ராக்கெட் மூலம் கடந்த 27-ம் தேதி மாலை 4.52-க்கு விண்ணில் செலுத்தப்பட்டது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின் மூலம் இயங்கும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை 2-வது முறையாக வெற்றிகரமாக செலுத்தி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சாதனை படைத்தது.விண்ணில் ஏவப்பட்ட 17 நிமிடம் 4 விநாடியில் பூமியில் இருந்து 214 கி.மீ. தூர சுற்றுப்பாதைக்கு ஜிசாட்-6 செயற்கைக் கோளை ஜிஎஸ்எல்வி டி-6 ராக்கெட் கொண்டு சென்றது.

விண்ணில் செயற்கைக் கோளின் சுற்றுப் பாதை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு கடைசியாக, நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப் படுவது வழக்கம். அந்த வகையில், ஜிசாட்-6 செயற்கைக் கோளின் திரவ எரிபொருள் மோட்டார் இயக்கப்பட்டு, முதல்கட்ட சுற்றுப்பாதை அதிகரிப்பு பணி நேற்று முன்தினம் (வெள்ளிக் கிழமை) காலை 8.35-க்கு வெற்றி கரமாக முடிக்கப்பட்டது. தொடர்ந்து 3 நாட்களுக்கு இப்பணி படிப்படியாக மேற் கொள்ளப்படும். பின்னர், குறைந்தபட்சம் 8,408 கி.மீ. அதிகபட்சம் 35,708 கி.மீ. கொண்ட நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் ஜிசாட்-6 செயற்கைக் கோள் நிலை நிறுத்தப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.பெங்களூருவில் உள்ள ஹசன் பிரதான கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து செயற் கைக் கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் இயக்கிவருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்