முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படேல் சமூகத்தலைவர் ஹர்திக் படேல் 2வது கட்ட போராட்டத்தை சூரத்தில் இன்று துவக்குகிறார்

திங்கட்கிழமை, 31 ஆகஸ்ட் 2015      இந்தியா
Image Unavailable

அகமதாபாத் - படேல் சமூகத்தினருக்கு வேலை வாய்ப்பு,கல்வியில் இட ஒதுக்கீடு மற்றும் தங்கள் சமூகத்தினருக்கு இதர பிற்படுத்தப்பட்டோர் அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று ஹர்திக் படேல் தலைமையில்குஜராத்தில் போராட்டம் நடந்து வருகிறது. கடந்த  செவ்வாய்க்கிழமையன்று முதல் கட்ட போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 4-5லட்சம் மக்கள் கலந்து கொண்டார்கள். மாநிலத்தையே உலுக்கிய அந்த போராட்டத்தை தொடர்ந்து ஹர்திக் படேல் தலைமையில் 2வது கட்ட போராட்டம் இன்று(செவ்வாய்க்கிழமை) சூரத்தில்  போராட்டம் தொடங்குகிறது.

தங்கள் சமூகத்தினர் போராட்டம் குறித்து ஹர்திக் படேல் நேற்று கூறியதாவது, குஜராத் மாநிலத்தில் உள்ள 137தலைவர்களை சந்தித்து போராட்டம் குறித்து விவாதிக்கிறோம். தற்போது நடைபெறும் அந்த போராட்டம் தாலுகா அளவில் நடைபெறவுள்ளது. எங்களது போராட்ட நிகழ்ச்சிகள் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று  வெளியிடுகிறோம். இந்த நிலையில் நாங்கள் மாநிலம் முழுவதும் பேரணியும் நடத்துகிறோம்.

எங்களது போராட்டம் குறித்து ஒட்டு மொத்த தேசமே திரும்பி பார்க்கிறது.மகாத்மா காந்தி காட்டிய பாதையில் நாங்கள் மெல்ல நடைபோடுகிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதியன்று அகமதா பாத்தில் நடந்த போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் 10பேர் கொல்லப்பட்டனர் . அவர்களில் பெரும்பாலானவர்கள்  போலீசார் துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் ஆவார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago