முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசின் புதிய உள்துறை செயலாளராக ராஜூவ் மகரிஷி

திங்கட்கிழமை, 31 ஆகஸ்ட் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த  ஐ-ஏஎஸ் பிரிவு அதிகாரியான ராஜூவ் மகிரிஷி மத்திய அரசின் புதிய உள்துறை செயலாளராக மோடி அரசால் நியமிக்கப்பட்டு இருக்கிறார். கடந்த ஓராண்டில் மோடி அரசு நியமிக்கும் 3வது உள்துறை செயலாளர் ராஜூவ் மகிரிஷி ஆவார். எல்.சி கோயல் திங்கட் கிழமையன்று தானாக ஓய்வு பெற்றார். புதிய உள்துறை செயலாளர் ராஜுவ் மகிரிஷி 1978ம் ஆண்ட ஐ.ஏ.எஸ் பிரிவு அதிகாரி ஆவார்.அவர் திங்கட்கிழமையன்று பொருளாதார விவகாரத்துறை செயலாளராக இருந்து ஓய்வு பெற்றார். அவரது புதிய பதவி குறித்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ஊழியர் மற்றும் பயிற்சி துறை மூலமாக இந்த அறிவிப்பு தருவதற்கு பதிலாக  பிரதமர் அலுவலகமே நேரடியாகஅவரை உள்துறை செயலாளராக நியமித்திருக்கிறது.


இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, எல்.சி கோயலின் தன்னார்வ ஓய்வு அறிவிப்பை கேபினட்டின் நியமன கமிட்டி ஏற்றுக் கொண்டிருக்கிறது.இதனைத்தொடர்ந்து மகிரிஷி நியமிக்கப்பட்டிருக்கிறார்.இவர் பொருளாளத்துறை விவகார செயலாளர் ஆக இருந்தவர். அவர் பதவியேற்ற நாளில் இருந்து 2ஆண்டுகளுக்கு உள்துறை செயலாளராக இருப்பார். இவ்வாறு அந்தசெய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கோயல் சன் டிவி நிறுவனத்திற்கு பாதுகாப்பு அனுமதி அளிக்கக்கூடாது என்று கடுமையாக எதிர்த்தவர் ஆவார்.

சன் டிவி நிறுவனத்திற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர் தானாக முன் வந்து ஓய்வு பெற்றிருக்கிறார். தகவல்மற்றும் ஒலிபரப்புத்துறை செயலாளர் பிமல் ஜூல்கா கடந்த ஜூலை மாதம் ஓய்வு பெற்றார். அவர் சன் டிவி நிறுவனத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்று பல முறை கோயலுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். சன் டிவி விவகாரத்தில் உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங்கிற்கும் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லிக்கும் இடையே போட்டி காணப்பட்டது. கோயல் கடந்த ஆகஸ்ட் மாதம் ஊரக மேம்பாட்டுத்துறை செயலாளராக இருந்து ஓய்வு பெற்றார்.அதன் பின்னர் அவர் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்