முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் கிரிக்கெட் டெஸ்ட் தொடர்கள் காந்தி-மண்டேலா பெயரில் நடத்தப்படும்

திங்கட்கிழமை, 31 ஆகஸ்ட் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா கிரிக் கெட் அணிகள் மோதும் டெஸ்ட்தொடருக்கு காந்தி-மண்டேலா பெயர் சூட்டப்படுகிறது என்று தென் ஆப்பிரிக்க கிரிக் கெட் மற்றும் இந்திய கிரிக் கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த அணிகள் மோதும் டெஸ்ட் தொடர்கள் காந்தி-மண்டேலா பெயரிலேயே நடத்தப்படும். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஜக் மோகன் டால்மியா கூறுகையில் இரு நாடுகள் சுதந்திரம் அடைவதற்கு நடத்திய போராட்டம் பொதுவானது.காந்தியும் மண்டேலாவும் தங்களது அகிம்சை வழியில் தங்களது நாட்டிற்கு சுதந்திரம் பெற்று தந்தார்கள்.அவர்கள் ஆயுதங்களை கையில் ஏந்தாமல் அறவழி போராட்டத்தில் சுதந்திரம் பெற்று தந்திருக்கிறார்கள்.

எனவே இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் தொடருக்கு காந்தி-மண்டேலா பெயர் சூட்டப்படும்என்றார். இந்திய கிரிக் கெட் வாரியத்தின் செயலாளர் அனுராக் தாகுர் கூறுகையில் இந்த இரு நாடுகளின் அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் சுதந்திர டிராபி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தங்களது நாடுகள் சுதந்திரம் அடைவதற்கு காந்தியும் மண்டேலாவும் தங்களது இன்னுயிரை தியாகம் செய்தவர்கள் ஆவார்கள்.

இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகன் சார்பாக இந்திய கிரிக் கெட் வாரியம் தலைச்சிறந்த சுதந்திர போராட்ட தலைவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் அவர்கள் பெயரில் டெஸ்ட் கிரிக் கெட் தொடரை நடத்துகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார். தென் ஆப்பிரிக்க கிரிக் கெட் வாரியத்தின் தலைவர் கிறிஸ் நென்சானி கூறுகையில் மகாத்மா காந்தி மற்றும் நெல்சன் மண்டேலா ஆகியோர் மிகப் பெரும் பொறுப்பான உரிமையை விட்டு சென்றிருக்கிறார்கள் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்