முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்பர்கி கொலை வழக்கு விசாரணை சிபிஐ வசம் ஒப்படைப்பு: சித்தராமையா அறிவிப்பு

திங்கட்கிழமை, 31 ஆகஸ்ட் 2015      இந்தியா
Image Unavailable

பெங்களூரு: சுட்டுக் கொல்லப்பட்ட எழுத்தாளர் எம்.எம்.கல்பர்கி கொலை சம்பவத்தை விசாரிக்கும் பொறுப்பை சிபிஐயிடம் ஒப்படைக்கும் வகையில் கர்நாடக அரசு பரிந்துரைத்துள்ளது.  கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டார். கர்நாடக மாநிலம், ஹூப்ளியின் இரட்டை நகர் தார்வார். இந்த நகரின் கல்யாண் நகர் பகுதியில் வசித்தவர் எம்.எம்.கல்பர்கி. முற்போக்கு எழுத்தாளராக அறியப்பட்டவர். நேற்று முன்தினம் காலை 8.40 மணியளவில் இவர் அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

பைக்கில் வந்த இரு நபர்களில் ஒருவர் கல்பர்கி வீட்டுக்குள் சென்று சுட்டுள்ளார். மற்றொரு நபர் வெளியே பைக்கை கிளப்பி தயாராக நின்றுள்ளார். கொலை நடந்ததும், இரு கொலையாளிகளும் தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து கர்நாடக போலீஸ் டிஜிபி, ஓம்பிரகாஷ் கூறுகையில், தார்வார், துணை கமினர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது என்றார்.

இந்நிலையில், வழக்கு விசாரணையை சி.ஐ.டியிடம் கொடுத்துள்ளதாக மாநில முதல்வர் சித்தராமையா நேற்று  அறிவித்தார். இந்நிலையில், வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு, இதை விசாரிக்கும் பொறுப்பை சிபிஐயிடம் ஒப்படைப்பதாக சித்தராமையா அறிவித்தார். இதற்கிடையே எழுத்தாளருக்கு டிவிட்டரில் கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்துத்துவாவை விமர்சனம் செய்த எழுத்தாளரை டிவிட்டரில் கொலை மிரட்டல் விடுத்த பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில். மங்களூரை சேர்ந்த பஜ்ரங்தள் அமைப்பு ஆதரவாளர் புவித் ஷெட்டி என்பவர் தனது டிவிட்டர் தளத்தில், "இந்துத்துவாவை மோசமாக பேசிய எழுத்தாளர்களான அனந்தமூர்த்தி மற்றும் கல்பர்கி இறந்தனர். இனி அடுத்தது பக்வான்தான்" என்று தெரிவித்திருந்தார். இத்தகவல் மீடியாக்களுக்கும் தெரியவந்தது. காவல்துறைக்கும் தெரியவந்தது. எனவே காவல்துறை மீடியா செய்தி ஆதாரத்தை கொண்டு, தானாக முன்வந்து வழக்கை பதிவு செய்தது.

இந்திய தண்டனை சட்டம் 506 மற்றும் 153ஏ ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்திருந்த போலீசார் இன்று புவித் ஷெட்டியை கைது செய்தனர். அவர் பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்தவர்தானா, அவரது கோபத்துக்கு என்ன காரணம் என்பவை குறித்து விசாரணை நடக்கிறது.முன்னதாக, எதிர்ப்பு வலுத்ததால் தனது டிவிட்டை அவர் டெலிட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்