முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை மீண்டும் பிறப்பிக்காதது பின்னடைவு அல்ல: அருண் ஜெட்லி

திங்கட்கிழமை, 31 ஆகஸ்ட் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்த அவசர சட்டத்தை மீண்டும் பிறப்பிக்காதது மத்திய அரசுக்கு பின்னடைவு அல்ல என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.  இது குறித்து ஜெட்லி மேலும் கூறும்போது, குடியரசுத் தலைவர் பிறப்பித்திருந்த அவசர சட்டம் காலாவதியாகும் நிலையில் அதை புதுப்பிக்க அரசு முயலவில்லை. இதற்கு மாற்றாக நீக்கு-போக்கு தன்மையுடன் கூடிய மாற்று வழியை அரசு பின்பற்றும். மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள இந்த மசோதாவில் தேவைக்கேற்ப திருத்தங்கள் செய்ய அரசு தயாராக உள்ளது. இது நிச்சயம் பின்னடைவு அல்ல. இந்த மசோதாவால் அரசியல் ரீதியில் முடக்கம் ஏற்படுவதற்கு பதிலாக மாற்று யோசனை மூலம் இதைக் கையாள முடிவு செய்துள்ளோம். அந்த வகையில் இது முன்னேற்றமே என்றார்.

முன்னதாக, பிரதமர் மோடி வானொலி உரையில் பேசுகையில், நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை மீண்டும் கொண்டு வர அரசு முயலாது என்று கூறியிருந்தார். ஏற்கெனவே குடியரசுத் தலைவர் பிறப்பித்த அவசர சட்டம் நேற்றுடன் காலாவதியான நிலையில் ஜெட்லி இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்