முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புத்த கயாவில் நடைபெறும் இந்து-புத்தமத சிந்தனை : மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு

திங்கட்கிழமை, 31 ஆகஸ்ட் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - பீகாரில் உள்ள புத்த கயாவில் இந்து-புத்தமத சிந்தனை மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு நாளை (செப்2) துவங்கி 5ம் தேதி வரை4நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் நிறைவு நாளான 5ம் தேதியன்று பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். கயாவில் உள்ள கோவிலுக்குகடந்த ஆகஸ்ட் மாதம் துவக்கத்தில் பிரதமர் மோடி செல்வதாக இருந்தது. ஆனால் அந்த பயணம் கடைசி நேரத்தில் ரத்து ஆனது. ந்து-புத்த மத சிந்தனையின் மாநாட்டின் நிறைவு நாளான செப்டம்பர் 5ம் தேதியன்று  பிரதமர் மோடி கலந்து கொள்ளும் தகவல் அதிகாரப்பூர்வ மாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டினை விவேகானந்தா இன்டர் நேஷனல் பவுண்டேஷன் நடத்துகிறது. இந்த அமைப்பு சங் பரிவார் தத்துவார்த்துவத்தின் மீது ஈடுபாடு கொண்டதாகும். ந்த இண்டர் நேஷனல் அமைப்பின் நிர்வாகிகள் தற்போது அமைச்சர்களாகவும் பெரும் அதிகாரிகளாகவும் இருக்கிறார்கள்.தற்போதைய அரசில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மற்றும் பிரதமரின் முதன்மை செயலாளர் நிருபேந்திரா மிஸ்ரா ஆகியோர் விவேகானந்தா இண்டர் நேஷனல் அமைப்பின் நிர்வாகிகளாக இருந்தவர்கள் ஆவார்கள்.

வேகனந்தா இண்டர் நேஷனல் அமைப்புடன் சர்வதேச புத்த மத பவுண்டேஷன் ஜப்பானின் டோக் யோ பவுண்டேஷன், ஆகியவையும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றன.  நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஜப்பான் சென்றிருந்தார். அப்போது இந்த மாநாடு நடத்துவது குறித்த ஆலோசனை செய்யப்பட்டது. நாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடன்  வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், எழுத்தாளர் சுதா மூர்த்தி, மற்றும் இந்து மற்றும் புத்த மதத்தின் குரு மார்கள் கலந்து கொள்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்