முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜவுளித்தொழிலில் உற்பத்தி பெருக ரூ 22.55 கோடி செலவில் புதிய திட்டங்கள் சட்டபேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 1 செப்டம்பர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: ஜவுளித்தொழில் உற்பத்தி பெருகவும் நெசவாளர்கள் வாழ்வு மேலும் பொலிவுறவும் ரூ 22 கோடியே 55 லட்சம் செலவில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று சட்டபேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.  தமிழக சட்டபேரவையில் விதி எண் 110 –ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார். அதன் விபரம் வருமாறு:

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கினை வகிப்பதிலும் மரபு மற்றும் பண்பாட்டினை பாதுகாப்பதிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் கைத்தறி மற்றும் துணிநூல் துறையை ஊக்குவிக்கும் வண்ணமும் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள நெசவாளர்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்தும் வண்ணமும் பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக எடுத்து வருகிறது.

தமிழ்நாடு பல ஆண்டுகளாக இந்திய ஜவுளித் தொழிலில் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. ஜவுளித் தொழிலின் பல்வேறு பிரிவுகளான கைத்தறி, விசைத்தறி, நூற்புப் பிரிவு, ஆயத்த ஆடை மற்றும் பின்னலாடை பிரிவுகளை மேலும் வலுப்படுத்தி, வளர்ச்சியினை அடையும் விதமாக அனைத்து பிரிவுகளின் கருத்துக்களைப் பெற்று ஒருங்கிணைந்த வளர்ச்சியினை அடையும் விதமாக ஒவ்வொரு பிரிவிலிருந்தும் பிரதிநிதிகளை உள்ளடக்கி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் குழு"" ஒன்று அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

2. தமிழ்நாட்டில் உள்ள 83 பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் மூலம் ஆண்டொன்றுக்கு சுமார் 200 கோடி ரூபாய் முதல் 220 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டுத் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் பட்டு ரக விற்பனையினை மேம்படுத்தவும் சரக்கு இருப்பினை வெகுவாகக் குறைக்கவும் அதன் மூலம் நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாடீநுப்பினை உறுதி செடீநுயவும், பட்டு ரக துணிகளின் விற்பனைக்கு 15 விழுக்காடு சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் அரசுக்கு 10 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.

3. ஜவுளித் தொழிலில், சர்வதேச தரத்துடன் கூடிய உட்கட்டமைப்பு வசதிகளை ஒரே இடத்தில் ஏற்படுத்தும் வகையில், மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீடிந தமிடிநநாட்டில் 14 ஜவுளிப் பூங்காக்கள் 983 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பளிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான ஜவுளிப் பூங்காக்களை உருவாக்குவதன் மூலம் ஜவுளித் தொழில் வளர்ச்சி அடையும். தமிடிநநாட்டில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதிகள், ஏற்படுத்துவதற்கும் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்க முன் வரும் தொழில் முனைவோர்களுக்கு 2 கோடியே 50 லட்சம் ரூபாடீநு வரை நிதி உதவி தமிழக அரசால் வழங்கப்படும் என்பதை மகிடிநச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

4. புதிய பதனிடுதல் பூங்காக்கள் உருவாக்குவதுடன் அல்லாமல், ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட பதனிடும் குழுமங்களை மேம்படுத்த, குறிப்பாக, பதனிடும் தொழிலுக்கு நீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை பிரிவுகளை மேம்படுத்த மைய அரசு """"ஒருங்கிணைந்த பதனிடும் மேம்பாட்டுத் திட்டம்"" என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜவுளித் துறையில், தரமான சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்பத்தினை ஏற்படுத்தி உலகளாவிய போட்டியினை எளிதாக எதிர்கொள்வதே ஒருங்கிணைந்த பதனிடும் மேம்பாட்டு திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். மத்திய அரசின் ஒருங்கிணைந்த பதனிடும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீடிந, ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில் நிறுவனங்களுக்கு ஒப்பளிப்பு செடீநுயப்பட்ட திட்ட மதிப்பீட்டில் மாநில அரசின் பங்காக 25 விழுக்காடு அளவிற்கு நிதி உதவி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

5. மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வந்த கிரியா ஊக்கத் திட்டத்திற்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவிகள் சிலவற்றை 2015-2016 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு நிறுத்திவிட்டது. இருப்பினும், தமிழக பட்டு விவசாயிகளின் நலன்களைத் தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் நிறுத்தப்பட்ட சிலவற்றில் முக்கிய திட்டங்களுக்கு மத்திய அரசின் பங்கினையும் சேர்த்து மாநில அரசு 2015-2016 ஆம் ஆண்டு முதல் கூடுதல் நிதியினை வழங்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரூ 5 கோடியே 25 லட்சம் மானியம் வழங்கி, 5,000 ஏக்கரில் உயர் விளைச்சல் தரும் மல்பரி ரகங்களை நடவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மகிடிநச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 5 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் நவீன பட்டுப்புழு வளர்ப்புத் தளவாடங்கள் மற்றும் விவசாய உபகரணங்கள் 1,000 விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தனியாக பட்டுப்புழு வளர்ப்புக் குடில் கட்ட 1,000 பட்டு விவசாயிகளுக்கு 8 கோடியே 5 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 4 கோடி ரூபாய் மானியத்தில், பட்டு விவசாயிகளுக்கு 1400 மல்பரி ஏக்கரில் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திட்டங்கள் 22 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா தனது அறிவிப்பில் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்