முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை மண்ணில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சாதனை

செவ்வாய்க்கிழமை, 1 செப்டம்பர் 2015      விளையாட்டு
Image Unavailable

கொழும்பு: 1993-ம் ஆண்டுக்குப் பிறகு இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2-1 என்று கைப்பற்றி இந்திய அணி சாதனை படைத்துள்ளது. கொழும்பு டெஸ்ட் போட்டியின் 5-ம் நாளான நேற்று 386 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஆடிய இலங்கை 268 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் 22 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது இந்திய அணி. முன்னதாக 1993-ல் அசாருதீன் தலைமையிலான இந்திய அணி, இலங்கை மண்ணில் 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது விராட் கோலி தலைமையில் 2-1 என்று வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளது. மேலும் 2011-ல் மே.இ.தீவுகளில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய பிறகு இப்போது டெஸ்ட் தொடரை அயல்நாட்டில் கைப்பற்றியது இந்தியா.

சதம் எடுத்த புஜாரா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அஸ்வின் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.  இலங்கை கேப்டன் அஞ்சேலோ மேத்யூஸ் அபாரமாக விளையாடி 110 ரன்கள் எடுத்து இசாந்த் சர்மாவின் 200-வது டெஸ்ட் விக்கெட்டாக வீழ்ந்தார். அவர் இசாந்த்தின் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.  இடையில் மேத்யூஸ், அறிமுக விக்கெட் கீப்பர் குசால் பெரேரா (70) இணைந்து மிகச்சிறப்பாக ஆடி 135 ரன்களை 6-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். குசால் பெரேரா 106 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் எடுத்திருந்த போது இந்திய வீரர்களுடன் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டு கவனம் சிதறினார்.

இதனையடுத்து தேநீர் இடைவேளைக்கு சற்று முன்னர் அஸ்வின் பந்தை கோபத்தில் தேவையில்லாமல் ரிவர்ஸ் ஸ்வீப் செய்து ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு மேத்யூஸ் 110 ரன்களில் அவுட் ஆக, ஹெராத் இறங்கி 2 பவுண்டரிகள் அடித்தார். அதுவும் யாதவ் பந்து வீச்சில் அதன் பிறகு அஸ்வினின் ஒரே ஓவரில் ஹெராத், தம்மிக பிரசாத் இருவரும் ஆட்டமிழந்தனர்.

கடைசியில் நுவான் பிரதீப் விக்கெட்டை அமித் மிஸ்ரா வீழ்த்த இலங்கை தேநீர் இடைவேளை முடிந்து எடுக்கப்பட்ட புதிய பந்தில் விறுவிறுவென விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 268 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  இந்திய தரப்பில் இசாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் அபாரமாக வீசி 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும், அமித் மிஸ்ரா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். வெற்றி பெற்ற இந்திய அணியின் மற்ற வீரர்கள் கரகோஷம் எழுப்ப புஜாரா, இசாந்த் வழிநடத்தி ஓய்வறைக்கு மகிழ்ச்சியுடன் சென்றனர்.

புஜாரா அருமையான சதம் எடுக்கவில்லையெனில் இந்த வெற்றி சாத்தியமில்லை. அதே போல் இசாந்த் சர்மா 5/54 என்று விக்கெட்டுகளைக் கைப்பற்றியது இலங்கையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் வீசும் சிறந்த பந்து வீச்சாகும்.  2-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் அபார பந்து வீச்சு, இந்திய பேட்டிங் இணைந்து வெற்றியை ஈட்டித் தந்தது. 3-வது டெஸ்ட் போட்டி புஜாரா, இசாந்த் சர்மா, மற்றும் 2-வது இன்னிங்சில் கோலிக்குப் பிறகு அபார பேட்டிங் செய்த பின்வரிசை வீரர்கள் என்று ஒரு அணியாக இந்த வெற்றி சாதிக்கப்பட்டுள்ளது.

அணி வீரர்களுக்கு கோஹ்லி புகழாரம் முதல் போட்டியில் தோற்று மீண்டு வந்து டெஸ்ட் தொடரை வெற்றி பெற்றது பெரிய சாதனையென்றும், இந்த புகழ் இந்திய அணி வீரர்களுக்கு சென்றடைய வேண்டும் என்று கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்தார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற பிறகு பரிசளிப்பு நிகழ்ச்சியில் கோஹ்லி கூறியது:  முதல் போட்டியில் தோற்ற அதிர்ச்சியில் இருந்து மீண்டு அடுத்தடுத்த போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது பெரிய சாதனை. இச்சாதனை முன்பு நிகழ்த்தப்படவில்லை என்று கேள்விப்பட்டுள்ளேன். இந்த வெற்றியின் புகழ், அணி வீரர்களை சென்று சேர வேண்டும்.

3வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம் பெறாத வருண் ஆரோன், புவனேஸ்வர், ஹர்பஜன் போன்றோரும் வெளியில் இருந்து எங்களுக்கு ஊக்கம் கொடுத்தனர். அவர்களுக்கும் வெற்றியில் பங்கு உண்டு.இளம் வீரர்களை கொண்ட ஒரு அணியை வைத்து வரலாற்றை உருவாக்கியது மகிழ்ச்சியளிக்கிறது. ஒவ்வொரு வீரருமே தங்களுக்கென்று ஒரு இடத்தை பிடிக்க முயலுகின்றனர்.வீரர்கள் அடிக்கடி காயத்தால் விலகியது எரிச்சலை கொடுத்தது.

இருப்பினும், அணி வீரர்களும், அணி நிர்வாகமும் அதை சமாளித்த விதம் புத்திசாலித்தனமானது. மாற்று வீரராகத்தான் புஜாரா களம் புகுந்தார். ஆனால் போட்டியின் முடிவை மாற்றும் ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினார். கஷ்டம் என்று நினைக்காமல், இதை ஒரு வாய்ப்பாக கருதி புஜாரா ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதுபோன்ற மனநிலையைத்தான் உருவாக்க வேண்டும். இலங்கை வீரருடன் இந்திய வீரர்கள் வாக்குவாதம் இந்திய வீரர்களுடன், இலங்கை வீரர் குஷால் பெரேரே வாக்குவாதம் செய்ததால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய வீரர் அஸ்வின் குறுக்கிட்டு பெரேராவை சமாதானம் செய்து வைத்தார்.

அஸ்வின் பந்து வீச்சை ரிவர்ஸ் ஸ்வீப் வகை ஷாட் அடிக்க முயன்ற பெரேரா, ரோகித் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.கேட்சை பிடித்த மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா, கையில் பந்தை வைத்துக்கொண்டு, தவளைபோல தவளைபோல துள்ளியபடி மகிழ்ச்சியுடன் வந்தார். இதைப்பார்த்த, இந்திய வீரர்களும் சிரித்து மகிழ்ச்சி கோஷமிடவே, பெரேரா கோபத்தில் கண்டபடி பேச ஆரம்பித்தார். இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அஸ்வின் வந்து தலையிட்டு பெரேராவை வெளியே போகும்படி சைகை காட்டினார். மீண்டும் பெரேரா அதுபோலவே பேசியபோது, முதுகில் தட்டிக்கொடுத்து அவரை தள்ளிவிட்டார் அஸ்வின்.இதனால் சிறிது நேரம், பரபரப்பு நிலவியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago