முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - பாகிஸ்தான் நேரடி பேச்சுவார்த்தைக்கு பான்-கீ-மூன் வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 1 செப்டம்பர் 2015      உலகம்
Image Unavailable

ஜெனிவா - எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியாவும் பாகிஸ்தானும் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று ஐ.நா. பொது செயலாளர் பான் கீ மூன் கேட்டுக்கொண்டுள்ளார்.  கடந்த மாதம் திட்டமிடப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு செயலாளர்கள் நிலையிலான பேச்சு கடைசி கட்டத்தில் ரத்து செய்யப்பட்டது குறித்து ஐ.நா. கவலைத் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இது குறித்து பான் கீ மூன் செய்தித் தொடர்பாளர் ஸ்டீஃபன் ஜாரிக் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறும்போது,  நாங்கள் உலக நாடுகள் பிரச்சினைகளை கூர்ந்து கவனித்து வருகிறோம். அதேபோல பாகிஸ்தானும் இந்தியா மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம்.  தற்போதைய எல்லைப் பிரச்சினைகளுக்கு நேரடி பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வாகும் என்று பான் கீ மூன் கூறியதாக ஜாரிக் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago